Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

முல்லைத்தீவு கேப்பாபுலவு மக்கள் முன்னெடுத்துள்ள காணி மீட்புப் போராட்டம் இன்று வியாழக்கிழமை பத்தாவது நாளாக தொடர்கின்றது.

84 குடும்பங்களின் 40 ஏக்கருக்கும் அதிகமான காணிகளை விமானப்படையினர் பிடித்து வைத்துள்ளனர். அந்தக் காணிகளை விடுவிக்கப் கோரியே கேப்பாபுலவு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், பெற்றோருடன் போராட்ட பகுதியிலிருக்கும் அவர்களின் பிள்ளைகளும் பாடசாலை செல்ல முடியாத நிலைமை தொடர்ந்தும் நீடிக்கும் நிலையில் மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் மற்றும் கரைதுரைபற்று பிரதேச செயலாளர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேற்று புதன்கிழமை விஜயம் செய்தனர்.

பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்புமாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பெற்றோரை மாவட்ட அரச அதிபரும் பிரதேச செயலாளரும் வலியுறுத்தியுள்ளனர். எனினும், தமது காணிகளை ஒப்படைக்கும் வரையில் போராட்டத்தைக் கைவிடப் போவதில்லை என்று மக்கள் பதிலளித்துள்ளனர்.

0 Responses to உறுதியான முடிவு இன்னும் இல்லை; கேப்பாபுலவு மக்களின் போராட்டம் பத்தாவது நாளாக தொடர்கிறது!

Post a Comment

Followers

அதிகமாக வாசிக்கபட்டவை...