Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

முல்லைத்தீவு கேப்பாபுலவு மற்றும் புதுக்குடியிருப்பு, கிளிநொச்சியின் பரவிப்பாஞ்சன் பகுதிகளில் இடம்பெற்று வரும் காணி மீட்புப் போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்தும், யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கில் மீள்குடியேற்றத்தை துரிதப்படுத்தக் கோரியும் யாழ்ப்பாணத்தில் இன்றும் (புதன்கிழமை) போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

யாழ். மத்திய பேருந்து நிலையத்தில் இன்று காலை 10.00 மணியளவில் ஆரம்பித்த இந்தப் போராட்டத்தினை தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கம், கிராமிய உழைப்பாளர் இயக்கம் ஆகியன ஏற்பாடு செய்திருந்தன.

இந்தப் போராட்டத்தில் இராணுவம் ஆக்கிரமித்துள்ள பொதுமக்களின் காணிகளிலிருந்து வெளியேற வேண்டும் என்கிற கோரிக்கை முன்வைக்கப்பட்டது. அத்தோடு, காணாமல் ஆக்கப்பட்டோரின் முடிவு என்ன?, அரசியல் கைதிகளின் விடுதலை எப்போது?, என்ற விடயங்களையும் போராட்டக்காரர்கள் கோசங்களாக எழுப்பினர்.

கேப்பாபுலவ- பிலக்குடியிருப்பில் விமானப்படையின் அத்துமீறிய ஆக்கிரமிப்பிலுள்ள 42 ஏக்கர் காணிகளை விடுவிக்குமாறு கோரி இன்று புதன்கிழமை 23வது நாளாக போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர்.

அதேவேளை, புதுக்குடியிருப்பில் 19 குடும்பங்களுக்குச் சொந்தமான 49 ஏக்கர் காணிகளிலிருந்து இராணுவத்தினரை உடன் வெளியேறுமாறு வலியுறுத்தி 03ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட மக்களின் போராட்டம் 20வது நாளாக தொடர்கின்றது.

இதனிடையே, கிளிநொச்சி – பரவிப்பாஞ்சான் பகுதியில் இராணுவம் ஆக்கிரமித்துள்ள தமது காணிகளை விடுவிக்குமாறுகோரி, பரவிப்பாஞ்சான் இராணுவ முகாமிற்கு முன்பாக நேற்றுமுந்தினம் திங்கட்கிழமை காலை பொதுமக்கள் தொடர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

0 Responses to கேப்பாபுலவு காணி மீட்பையும், வலி வடக்கு மீள்குடியேற்றத்தையும் வலியுறுத்தி யாழில் இன்றும் போராட்டம்!

Post a Comment

Followers