Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

நாட்டில் சம உரிமை கோருவோர் மீது இன்னமும் இன வன்முறை கட்டவிழ்த்து விடப்படுவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

அரசியல் தீர்வுத் திட்டமொன்றை முன்வைக்கும் வரையில், தமிழ் மக்கள் தமது உரிமைகளுக்காக போராடிக் கொண்டிருப்பார்கள் என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை உரையாற்றும் போதே இரா.சம்பந்தன் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

தமிழ் மக்களுக்கு சம உரிமை வழங்கப்படாமையும், அதற்கான போராட்டங்களின் மீது இன வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டமையுமே தமிழ் இளைஞர்கள் ஆயுதப் போராட்டத்தினை முன்னெடுப்பதற்கு காரணமானது என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

0 Responses to சம உரிமை கோருவோர் மீது இன்னமும் இன வன்முறை கட்டவிழ்த்து விடப்படுகின்றது: சம்பந்தன்

Post a Comment

Followers

அதிகமாக வாசிக்கபட்டவை...