Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஜெயலலிதா - சசிகலா சொத்துக் குவிப்பு வழக்கை விசாரித்த நீதிபதிகள் தனது
தீர்ப்பில் சுட்டிக்காட்டி உள்ள பத்து விஷயங்கள் இதோ, பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பை வரிக்குவரி ஏற்கிறோம்.

சம்பாதிப்பதற்காகவே ஜெயலலிதா வீட்டில் சதித்திட்டம் போட்டார்கள்.
ஒரு வங்கிக் கணக்கில் இருந்து இன்னொரு வங்கிக் கணக்குக்கு பணத்தை
இவர்கள் மாற்றியதிலிருந்தே இந்தச் சதித்திட்டம் வெளிப்படுகிறது.

எங்களது கணக்கீட்டின்படி 211 சதவிகிதம், இவர்கள் கூடுதலாகச் சம்பாதித்து
உள்ளார்கள்.

எந்தவிதமான குற்ற உணர்ச்சியும் இல்லாமல் மிகத் திறமையாகத் திட்டமிட்டு சொத்துக்களை இவர்கள் வாங்கிக் குவித்துள்ளார்கள்.

ஒரு ஆக்டோபஸ் மாதிரி, அத்தனை திசையிலும் அவர்கள் தங்களது ஊழலை நடத்தியுள்ளார்கள். *பணம்... பணம்... பணம் என்று பணத்தைக் குறியாகவைத்தே குற்றம்சாட்டப்பட்டவர்கள் வேலைகளைச் செய்துள்ளார்கள்.

சொத்துக்களை எப்படியெல்லாம் வாங்கிக் குவிக்க வேண்டும் என்ற பேராசையுடன்ந டந்துள்ளார்கள்.

பொதுமக்களுக்கும் நமது அரசியலமைப்புச் சட்டத்துக்கும் செய்யும்
நம்பிக்கைத் துரோகம் இது.ஊழல் சக்திகள் நாட்டில் அதிகம். ஆனால், நியாய தர்மத்துக்குப் பயந்து நடப்பவர்கள் சிறுபான்மையினர்.

0 Responses to ஜெயலலிதா - சசிகலா சொத்துக் குவிப்பு வழக்கில் சுட்டிக்காட்டி உள்ள பத்து விஷயங்கள்

Post a Comment

Followers

உலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.