Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தனுக்கு உண்மையிலேயே முதுகெலுப்பு இருந்தால் அவரை பகிரங்க விவாதமொன்றுக்கு வருமாறு அழைப்பதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

கூட்டமைப்பின் இன்னொரு பாராளுமன்ற உறுப்பினரான எம்.ஏ.சுமந்திரனை பகிரங்க விவாதத்துக்கு வருமாறு பல தடவைகள் அழைத்துள்ளோம். ஆனாலும், அவர் அதனைத் தவிர்த்து வந்திருக்கின்றார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு பேசும் போதே கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “இலங்கை அரசாங்கம் இறுதி மோதல்களில் இழைத்த குற்றங்கள் இனி தனிக்குற்றங்களாகவே கணிக்கப்படப்போகின்றது. அதற்கு இரா.சம்பந்தன் ஒத்துழைக்கப்போகின்றார். போர்க்குற்றம் உள்ளிட்ட மனித குலத்திற்கு எதிராக இலங்கை அரசு மேற்கொண்ட குற்றங்கள் தொடர்பிலான விசாரணைகளை கைவிடும் ஏற்பாடுகளுக்கு இரா.சம்பந்தனும் இசைந்து போகின்றார்.

போர்க்குற்றம் மனித குலத்திற்கு எதிரான குற்றம். இனப்படுகொலை நிகழ்ந்திருக்கிறது என்றால் அதற்கு மன்னிப்பு கிடையாது. அதற்கு தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பது ஐக்கிய நாடுகளின் விதி.

எங்கள் பிரதிநிதி என்று சொல்லக்கூடிய இரா.சம்பந்தன் இலங்கை பாராளுமன்றில் இது கட்டமைக்கப்பட்ட குற்றமாக தாம் பார்கவில்லை என ஒப்புக்கொண்டிருக்கின்றார். அவரது பேச்சினூடாக நடைபெறவேண்டிய பொறுப்புக் கூறலில் இருந்து விடுபிட்டு உண்மையைக் கண்டறிவதாற்கான ஆணைக்குழு ஒன்றிற்கு அத்திவாரமிடுகின்றார். இது பாரிய குற்றமாகும்.” என்றுள்ளார்.

0 Responses to பகிரங்க விவாதத்துக்கு வருமாறு சம்பந்தனை அழைக்கின்றோம்: கஜேந்திரகுமார்

Post a Comment

Followers