காணி விடுவிப்பினை முன்னிறுத்தி 14வது நாளாக இன்றும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள முல்லைத்தீவு கேப்பாபுலவு மக்களுக்கு உரிய தீர்வினை வழங்கக் கோரி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே ஆகியோருக்கு வடக்கு மாகாண சபை கடிதமொன்றை இன்று திங்கட்கிழமை அனுப்பி வைத்துள்ளது.
அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “கேப்பாபுலவில் 524 ஏக்கர் தனியாருக்குரிய காணிகள் விடுவிக்கபட வேண்டும். அவற்றில் 243 ஏக்கர் காணி கடந்த ஜனவரி மாதம் 25ஆம் திகதி விடுவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்ட போதும், அது விடுவிக்கப்படவில்லை. இப்பகுதிக்குரிய 84 குடும்பங்களில் 54 குடும்பங்களிடம் தமது காணிகள் என உறுதிப்படுத்தும் ஆதாரங்கள் உள்ளன. எனவே, இவற்றை கவனத்தில் கொண்டு தீர்வைப் பெற்றுத் தர வேண்டும்.” என்றுள்ளது.

0 Responses to கேப்பாபுலவு மக்களின் காணிகளை விடுவிக்கக் கோரி வடக்கு மாகாண சபை ஜனாதிபதி, பிரதமருக்கு கடிதம்!