புதிய அரசியலமைப்பினை உருவாக்கும் போது அர்த்தமுள்ள வகையில் அதிகாரத்தினை பகிரும் வேலைத்திட்டம் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு தயாராக இருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
புதிய அரசியலமைப்பை நிறைவேற்றும் போது அதற்காக பொது வாக்கெடுப்பு ஒன்றை நடத்தி பொதுமக்களின் அனுமதியுடன் அதனை நிறைவேற்ற வேண்டும் என்றும் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளதாவது,
“பாராளுமன்ற அதிகாரம், அரசாங்க அதிகாரம், நிறைவேற்று அதிகாரம் மற்றும் தேர்தல் முறைமை என்பவற்றில் முக்கிய மாற்றங்கள் மேற்கொள்ளப்படுமாயின் பொதுமக்களின் அனுமதியின்றி மேற்கொள்ள முடியாது என்பதே தமது கட்சியின் நிலைப்பாடு. அதேபோன்று புதிய அரசியலமைப்பு திருத்தத்திற்கு பொதுமக்கள் அனுமதி வழங்குவார்கள் என்ற நம்பிக்கை உண்டு. அத்துடன், சமஷ்டி முறையிலான தீர்வு தொடர்பில் தற்போதுள்ள பிழையான கருத்தை சரிசெய்ய வேண்டியது அவசியம்.” என்றுள்ளார்.

0 Responses to அதிகாரத்தை பகிரும் வேலைத்திட்டம் தொடர்பில் உரையாடத் தயார்: கூட்டமைப்பு