முல்லைத்தீவு கேப்பாபுலவு பிலவுக்குடியிருப்பு மக்கள் முன்னெடுத்துள்ள மண் மீட்புப் போராட்டம் இரவு பகல் பாராது ஏழாவது நாளாக இன்று திங்கட்கிழமையும் தொடர்கின்றது.
கேப்பாபுலவு விமானப்படையின் பிரதான நுழைவாயிலிருந்து பிலவுக்குடியிருப்பு வரையுள்ள 84 குடும்பங்களின் காணிகளை விடுவிக்கக் கோரியே இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், நேற்றுமுன்தினம் சனிக்கிழமை கேப்பாபுலவிற்கு விஜயம் மேற்கொண்ட வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், மக்களின் போராட்டம் நியாயமானது என்றும், அதற்கு பூரண ஒத்துழைப்பு வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

0 Responses to கேப்பாபுலவு மக்களின் மண் மீட்புப் போராட்டம் இரவு பகல் பாராது ஏழாவது நாளாகவும் தொடர்கிறது!