யாழ்ப்பாணம், கிளிநொச்சி, அனுராதபுரம் உள்ளிட்ட நாட்டின் அநேக பகுதிகளில் எதிர்வரும் மாதங்களில் கடும் வறட்சி ஆபத்து இருப்பதாக அனர்த்த முகாமைத்துவ அமைச்சு தெரிவித்துள்ளது.
இதனையடுத்து, அனுராதபுரம், கிளிநொச்சி, கம்பஹா, அம்பாந்தோட்டை, யாழ்ப்பாணம், குருநாகல், மொனராகல, முல்லைத்தீவு, புத்தளம், இரத்தினபுரி, திருகோணமலை, கண்டி, வவுனியா, கேகாலை உள்ளிட்ட 14 மாவட்டங்களில் நிவாரண சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இந்த மாவட்டங்களில் சுமார் 5 இலட்சம் பேர் குடிநீர் தட்டுப்பாட்டை எதிர்கொண்டுள்ளனர். மேலதிக நீர் தாங்கிகள், ரக்டர், பௌசர், போன்றவற்றைக் கொள்வனவு செய்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கடும் வறட்சி நிலையால், தற்போது குடிநீர்ப்பிரச்சினை, பயிர்ச் சேதம், காட்டுத் தீ போன்ற பிரச்சினைகள் உருவாகியுள்ளன. இவ்வாறானதொரு நெருக்கடியை எதிர்கொள்ள அனர்த்த முகாமைத்துவ அமைச்சும், ஏனைய சம்பந்தப்பட்ட பிரிவுகளும் பலமுன்னேற்பாடுகளை மேற்கொண்டு வருவதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

0 Responses to யாழ்ப்பாணம், கிளிநொச்சி, அனுராதபுரம் உள்ளிட்ட நாட்டின் அநேக பகுதிகளில் கடும் வறட்சி!