Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

அம்பந்தோட்டையில் 15,000 ஏக்கர் தனியார் காணிகளை அரசாங்கம் சுவீகரிக்கப்போகிறது என்ற வெறும் வதந்திக்கே தெருவுக்கு வந்து, பெரும் போராட்டங்களை நடத்திய சிங்கள மக்கள், வடக்கில் கேப்பாவுலவு என்ற முல்லைத்தீவு மாவட்ட கிராமத்தில் கடந்த 15 நாட்களாக தெரு போராட்டம் நடத்தி வரும் அப்பாவி தாய்மார்கள், குழந்தைகள் அடங்கிய தமிழ் மக்களைப் பற்றி கேட்டு அறிய வேண்டும் என தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும், அமைச்சருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

சிங்கள வானொலியொன்றில் நேற்று புதன்கிழமை இரவு இடம்பெற்ற விவாத நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மனோ கணேசன் கூறியுள்ளதாவது, “அம்பந்தோட்டையில் 15,000 ஏக்கர் தனியார் காணி சுவீகாரம் என்ற வெறும் வதந்திதான் பரவியது. அதற்கு எதிராக அனைத்து எதிர்கட்சிகளும் மக்களை அணி திரட்டினார்கள். மக்களும் பல்லாயிரக்கணக்கில் தெருவுக்கு வந்தார்கள். பெளத்த குருமார் தலைமை தாங்கினார்கள். இளைஞர்கள் பொலிஸாருடன் மோதினார்கள். அரசு சொத்துக்கு சேதம் ஏற்பட்டது. இன்னமும் பலர் சிறைவாசம் அனுபவிக்கின்றார்கள். ஆனால், அங்கே காணி சுவீகரிப்பு என்ற விடயம் முடிவுக்கு வந்து விட்டது.

கேப்பாபுலவு என்ற முல்லைத்தீவு மாவட்ட கிராமத்தில் தாய்மார்கள், குழந்தைகள் அடங்கிய தமிழ் மக்கள் குழுவினர், கடந்த கடந்த 15 நாட்களாக தெரு போராட்டம் நடத்தி வருகிறார்கள். அவர்களது போராட்டம் அமைதி போராட்டமாக இருக்கிறது. குழந்தைகளும், தாய்மார்களும் அங்கேயே வெயிலிலும், மழையிலும், பனியிலும் அமைதியாக அமர்ந்து, தூங்கி, எழுந்து, தொடர்ந்து போராடுகிறார்கள்.

இந்த மக்களை பற்றி சிங்கள மக்கள் பற்றி கேட்டு அறிய வேண்டும். தங்கள் சொந்த இடங்களை கேட்டு அப்பாவி தமிழ் மக்கள் நடத்தும் இந்த அமைதி போராட்டம், தேசிய, சர்வதேசிய காதுகளை இன்னமும் எட்ட வேண்டும். ஆகவே, இன்னமும் ஓரிரு நாட்களில் நான் அங்கு செல்ல உள்ளேன். அங்கே போவதை முன்கூட்டியே சொல்லி விட்டுத்தான் போகிறேன்.” என்றுள்ளார்.

0 Responses to அம்பாந்தோட்டையில் காணிக்காகப் போராடிய சிங்கள மக்கள் கேப்பாபுலவு தமிழ் மக்களை அறிய வேண்டும்: மனோ கணேசன்

Post a Comment

Followers

உலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.