ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன், மீதான சொத்துக்குவிப்பு வழக்கிலான உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு நாளை என்பது உறுதிபடுத்தப்பட்டிருக்கிறது. கர்நாடாக உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பு நாளை காலை 10.30 மணிக்கு வழங்கப்படும் என அறிவிக்கட்டிருக்கிறது. தமிழக அரசியலின் முக்கியத்துவம் மிக்கதாக உணரப்படும் இத் தருணத்தில் வெளிவரவுள்ள இத் தீர்ப்பு, தமிழக அரசியலில் அதிரடியான திருப்பங்களை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
நீதிபதிகள், பினாக்கி சந்திரகோஷ், அமித்தவராய் ஆகிய இரு நீதிபதிகளை உள்ளடக்கிய உச்சநீதிமன்ற அமர்வினால் விசாரிக்கப்பட்ட இவ்வழக்கின் வாதப்பிரதிவாதங்கள் முடிவடைந்து, தீர்ப்பு வழங்குவதற்கான திகதி அறிவிக்கப்படாதிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இரு நீதிபதிகள் கொண்ட இந் நீதிமன்ற அமர்வின் தீர்ப்பு, சசிகலா முதல்வராகப் பதவி ஏற்பதற்கு தடை ஏற்படலாம், தடை ஏற்படாது என்பதற்கான சந்தர்பங்கள் உண்டு என்பதாக சட்டவல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

0 Responses to சசிகலா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் நாளை தீர்ப்பு!