Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

யாழில் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரனை கொலை செய்ய திட்டமிட்ட சம்பவம் தொடர்பில், உலகத் தமிழர் பேரவை அதிருப்தி வெளியிட்டுள்ளது.

இந்த கொலை முயற்சி ஈடேறாமல் இதற்கு உதவிய அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாக உலகத் தமிழர் பேரவை செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும், இந்த கொலை முயற்சிக்கு பொறுப்பானவர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு எதிராக விசாரணை நடத்த வேண்டும் என உலகத் தமிழர் பேரவை கண்டனம் வெளியிட்டுள்ளது.

அரசியலமைப்பு செயல்முறை ஊடாக தமிழ் மக்களின் குறைகளை தீர்க்க அர்ப்பணிப்புடன் செயற்பட்ட எம்.ஏ சுமந்திரனுக்கு நன்றி தெரிவித்து, உலகத் தமிழர் பேரவை மற்றும் புலம்பெயர் தமிழர்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

இலங்கை அரசியல் வட்டாரத்தில், மீண்டும் வன்முறைகள் ஏற்படாமல் இருப்பதற்கு பொதுமக்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என உலகத்தமிழர் பேரவை அறிவித்துள்ளது.

0 Responses to சுமந்திரனை கொலை செய்ய திட்டம் : உலகத் தமிழர் பேரவை கண்டனம்

Post a Comment

Followers

அதிகமாக வாசிக்கபட்டவை...