சட்டமன்ற உறுப்பினர்களின் வயிற்றில் புளியை கரைக்க களம் இறங்கியது வருமான வரித்துறை. சசிகலாவை ஆதரிக்கும் சட்டமன்ற உறுப்பினர்களின் வங்கி கணக்குகள் மற்றும் அவரது குடும்பத்தினரின் நடவடிக்கைகளை கடந்த சில தினங்களாகவே வருமான வரித்துறையினர் தீவிரமாக கண்காணித்து வரும் நிலையில் எந்த நேரத்திலும் வருமான வரி சோதனை நடக்ககூடும் என தகவல்கள் தெரிவிக்கிறது.
அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது குடும்பத்துடனோ, அரசு அலுவலகங்களிலோ இல்லாத நிலையில், அவர்கள் சொகுசு உணவு விடுதியில் உல்லாசமாக உள்ளனர். எனவே,இது அவர்களுக்கு பீதியைக் கிளப்பும் புரளியாகவும் இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

0 Responses to குதிரை பேரம்; களம் இறங்கியது வருமான வரித்துறை!