Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஈழ விடுதலையின் வீரியத்தை இன்னொரு கட்டத்திற்கு எடுத்துச் சென்றது தமிழீழ பண்பாட்டு இயக்கமும், தமிழீழ இசைக்குழுவினரும்.

தேசத்தின் விடுதலை வரலாற்றை புரட்சிப் பாடகர் சாந்தனின் பங்களிப்பு இன்றி முழுமை பெறாது. புரட்சிப் பாடல்களாலும், உணர்ச்சிக் குரலின் தாக்கத்தினாலும், இளைஞர்கள், யுவதிகளை விடுதலைப் போராட்டத்தில் இணைய வைத்ததில் இவரின் பாடல்கள் மிக முக்கிய பங்காற்றியிருக்கின்றன.

தாயகத்தை, தாயக மண்ணை, தேசியத் தலைவரை, விடுதலைப் புலிகளின் வெற்றியை, தமிழீழ மக்களின் உணர்ச்சிகளை, பக்திப் பாடல்களை என்று அத்தனையிலும் தன்னை அவர் ஈடுபடுத்தியிருக்கிறார்.

தாயகத்திற்காக அவரின் குரல்கள் எவ்வாறு ஒலித்தது என்பதை பின்வரும் பாடல்கள் நினைவு படுத்துக்கின்றன.

தொன்னூறுகளின் ஆரம்பத்தில் தமிழ் மக்களின் மனங்களை அதிகம் கவர்ந்திழுத்த பாடல் தான் “ இந்த மண்ணன் எங்களின் சொந்த மண் ” சாந்தனின் இந்தப் பாடலில் பொதிந்திருக்கும் உள்ளார்ந்த அர்த்தங்களும், குரலின் நயமும் ஈழ தேசத்தின் விடுதலையை மேலும் தமிழ் மக்கள் மத்தியில் விதையிட்டது.

சோழர் காலத்தை நினைவுபடுத்தி, ஈழத்தில் சோழர் ஆட்சி திரும்புவதாக நினைத்து பாடப்பட்டது ஆழக் கடல் எங்கும் சோழ மகராஜன் ஆட்சி புரிந்தானே அன்று, சரித்திரத்தில் பேசும் பாடலாகியிருக்கிறது.

“ஈடு வைத்து ஈடு வைத்து நந்தலாலா தமிழ் ஈழம் தரப் போகிறாவே நந்தலா” சந்திரிக்கா அம்மையாரின் ஆட்சியின் போது விடுதலைப் புலிகள் ஈட்டிய வெற்றியை பறைசாற்றிக் கொண்டிருந்த பாடல் இது.

தமிழீழ அரசியல்த்துறைப் பொறுப்பாளர் சு.ப தமிழ்செல்வன் அவர்கள் இலங்கை விமானப் படையினரின் தாக்குதல்களின் போது வீரமரணமடைந்தார். அன்றைய நாள் தமிழின மக்களின் மனதில் ஏற்படுத்திய காயத்தை இன்னொரு வடிவமாக மாற்றினார் சாந்தன், “நித்திய புன்னை அழகன் இன்று நீள் துயில் கொள்ளுகிறான், நாங்கள் தொட்டு அழைக்கவும் சொல்லி அழைக்கவும் ஏதுமே பேசாமலே தூங்குகிறான்”

“காலை விடிந்ததடா கண்ணைத் திற கண்ணைத் திற, வீரப்படை சேனை ஒன்று வென்றதடா கண்ணைத் திற” விடுதலைப் புலிகள் கட்டுநாயக்க விமான நிலையத் தாக்குதலை காலையில் எழுந்த தமிழ் மக்களுக்கு வெற்றியோடு பறைசாற்றிய பாடல் இது. இந்தப் பாடலை எளிதில் தமிழ் மக்கள் மறந்து விடமாட்டார்கள்.

“கல்லறை மேனியர் கண் திறப்பார்களே கார்த்திகை நாளிலே ” மாவீரர்களின் கனவுகளை சுமந்து வந்த பாடல் இது.

“இனிவரும் இனிவரும் காலங்கள் அவை எங்களின் காலங்கள்” ஆனையிறவு தாக்குதலும் அதன் வெற்றியையும் காற்றினில் கலந்த கீதங்கள் இவை.

“உள்ளுக்குள்ளே நெருப்பெரியும் அட உலகிங்கே இது புரியும்” கரும்புலிகளின் கனவை சுமந்த பாடல் இது.

தமிழீழ காலம் உள்ளவரை சாந்தனின் விடுதலைப் போராட்டத்தில் இசை வகித்த வகிபாகங்கள் என்றும் அழியாது. இன்னும் விடுதலைக்கும் இந்தப் புரட்சிப் பாடகனின் இசை ஊக்கிவித்துக் கொண்டே இருக்கும் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.

விடுதலைப் போராட்ட வீரர்களின், தமிழ் மக்களின் ஆஸ்தான விடுதலைப் போராட்ட குயிலின் உடல் சொந்த மண்ணில் விதையாகட்டும். அவன் இந்த மண் எங்களின் சொந்த மண் என்று பாடி, இன்று அதே சொந்த மண்ணில் விதையாகிவிட்டான்.

சுதந்திரமாய் தூங்குங்கள், தேசம் ஒரு நாள் விடுதலை பெறும், அதுவரை உங்கள் பாடல்கள் ஊக்கிவித்துக் கொண்டே இருக்கும்.

0 Responses to தேசத்தின் விடுதலை வரலாற்றில் சாந்தனின் கலைப் புரட்சி! தேசியத்தின் தணியாத தாகம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com