Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஐக்கிய தேசியக் கட்சிக்கும் ஜாதிக ஹெல உறுமயவுக்கும் இடையில் 2015ஆம் ஆண்டு கைச்சாத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மீறி, ஐக்கிய தேசியக் கட்சியில் இணைவதற்கு ஜாதிக ஹெல உறுமயவின் பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர் முயற்சிப்பதாக ஜாதிக ஹெல உறுமய குற்றஞ்சாட்டியுள்ளது.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை அத்துரலிய ரத்ன தேரர் அண்மையில் சந்தித்துள்ளமை தமக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் அந்தக் கட்சி தெரிவித்துள்ளது.

ஜாதிக ஹெல உறுமயவில் இருந்து விலகி தான் பாராளுமன்றத்துக்குள் தனித்து இயங்கப் போவதாக ஏற்கனவே அத்துரலிய ரத்ன தேரர் அறிவித்திருந்த நிலையிலேயே, இந்தக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

ஜாதிக ஹெல உறுமயவின் இணைத்தலைவர் ஹெடிகல்லே விமலசர தேரர் தெரிவித்துள்ளதாவது, “இரு கட்சிகளுக்குமிடையில் கைச்சாத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் பிரகாரம், ஜாதிக ஹெல உறுமயவுக்கென ஒதுக்கப்பட்ட தேசியப் பட்டியல் மூலமான பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கான இடத்திலேயே அத்துரலிய ரத்ன தேரர் நியமிக்கப்பட்டார். எனவே, ஐக்கிய தேசியக் கட்சியில் இணைவதற்கு, ரத்ன தேரருக்கு உரிமை கிடையாது.

எனினும், பாராளுமன்றத்தில் சுயாதீனமாகச் செயற்படும் முடிவை, ரத்ன தேரர் மீளப்பெற்றுக் கொண்டால், அவரை மீண்டும் கட்சியில் சேர்த்துக் கொள்வதற்குத் தயாராக இருக்கின்றோம். அவர் தனது முடிவை வாபஸ் பெற்று, ஹெல உறுமயவுடன் இணைந்து பணியாற்ற வேண்டும். புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கூறப்பட்டதைப் போல, ஜனாதிபதியுடனும் பிரதமருடனும் அவர் இணைய முடியாது. ஜனாதிபதி கலந்துகொள்ளும் நிகழ்வுகளில் கலந்துகொண்டு, ஐக்கிய தேசியக் கட்சியினதும் ஜனாதிபதியினதும் விருப்பை வெல்வதற்கு, அவர் முயல்கிறார். அவருக்கெதிரான ஒழுக்காற்று விசாரணைகளிலிருந்து தப்புவதற்கு, இது வழி கிடையாது.”என்றுள்ளார்.

0 Responses to ஒப்பந்தங்களை மீறி அத்துரலிய ரத்ன தேரர் ஐ.தே.க.வில் இணைய முயற்சி; ஜாதிக ஹெல உறுமய குற்றச்சாட்டு!

Post a Comment

Followers