Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான நீண்டகால தொடர்புகளைப் முன்னிறுத்திக் கொண்டு பெற்ற அனுபவங்களின் அடிப்படையில் எழுச்சி பெறும் ஆசியாவில் தலை நிமிர்வது குறித்து புதிதாக சிந்திக்க வேண்டியுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
சீன கம்யூனிஸ்ட் கட்சியின் சர்வதேச திணைக்கள அமைச்சர் சென்தாவோவுடனான சந்திப்பின் போதே பிரதமர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

நேற்று வியாழக்கிழமை காலை அலரி மாளிகையில் இடம்பெற்ற சந்திப்பின் போது சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கும், பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சிக்குமிடையிலான நீண்டகால தொடர்புகள் குறித்து நினைவூட்டப்பட்டது.

சீன கம்யூனிஸ்ட் கட்சியுடன் தொடர்புகளை ஏற்படுத்திய இலங்கையின் முதலாவது அரசியல் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி என சீன கம்யூனிஷ்ட் கட்சியின் சர்வதேச திணைக்கள அமைச்சர் சோங் தாஓ ஞாபகமூட்டினார். மக்கள் சீன குடியரசு அமைக்கப்பட்ட பின்னர், ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான அரசாங்கம் சீனாவுடன் வர்த்தக நடவடிக்கைகளை ஏற்படுத்திக் கொண்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

சீன கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் ஐக்கிய தேசிய கட்சிக்கும் இடையேயுள்ள நீண்ட கால தொடர்பை அடிப்படையாகக் கொண்டு இலங்கை இந்து சமுத்திரத்தின் மத்திய நிலையமாக உருவாக மேற்கொள்ளும் முயற்சிக்கு சீன கம்யூனிஸ் கட்சியினதும் மக்கள் சீன குடியரசினதும் பூரண ஒத்துழைப்பை வழங்குவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை மீது கொண்டுள்ள நட்புக்கும் அக்கறைக்கும் நன்றி தெரிவித்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க, இரு தரப்பாரிடையேயும் உள்ள நட்பின் அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டு எழுச்சி பெறும் ஆசியாவை உருவாக்குவது தொடர்பாக புதிதாக ஆராய வேணடிய காலம் ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டினார்.

பிரதமர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “இலங்கை எப்போதும் நடுநிலைக் கொள்கையை பின்பற்றுவதகாவும் ஏனையோருக்கு அச்சுறுத்தலாகவோ இடையூறாகவோ இல்லாது அனைத்து சர்வதேச நாடுகளுடனும் நட்புறவை பேணுவதே இலங்கையின் தற்போதைய கொள்கை.

சீன ஜனாதிபதி ஆரம்பித்துள்ள திட்டத்தோடு இலங்கை மகிழ்ச்சியுடன் பங்குகொள்வது மேற்குறிப்பிட்ட கொள்கை அடிப்படையிலேயே. அம்பாந்தோட்டை கைத்தொழில் நகரம் மற்றும் கொழும்பு நிதி நகரம் என்பவற்றை அமைப்பது தொடர்பாக சீனாவின் பங்களிப்பு குறித்து சீன மக்கள் குடியரசுக்கு நன்றிகள்.” என்றுள்ளார்.

0 Responses to எழுச்சி பெறும் ஆசியாவில் தலை நிமிர்வது குறித்து புதிய சிந்தனை அவசியம்: ரணில்

Post a Comment

Followers

உலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.

அதிகமாக வாசிக்கபட்டவை...