Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இலங்கை தன்னுடைய பொறுப்புக்களை நிறைவேற்றுவதற்கு ஐக்கிய நாடுகள் இன்னமும் கால அவகாசம் வழங்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கூறியிருப்பது ஏற்புடையதல்ல என்று ஈபிஆர்எப்பின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை மேற்கொண்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை நேற்று திங்கட்கிழமை சந்தித்து கலந்துரையாடிய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்க்ணடவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறியுள்ளதாவது, “ஒட்டுமொத்த தமிழ் மக்களும், தமிழ்தேசியக் கூட்டமைப்பின் எட்டு பாராளுமன்ற உறுப்பினர்களும் இலங்கை அரசாங்கத்துக்கு ஐக்கிய நாடுகள் சபை கால நீடிப்பு வழங்க கூடாது என்ற நிலைப்பாட்டில் உள்ளன. இந்த தருணத்தில் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் நிபந்தனையுடன் கால அவகாசம் வழங்கவேண்டும் என்று தெரிவித்திருக்கும் கருத்தானது மிகமிக முட்டாள்தனமானது.

ஒட்டுமொத்த தமிழ் மக்களும் கால அவகாசம் வழங்குவதனை மறுத்திருக்கின்றார்கள். ஏற்கனவே இருந்த ஒன்றரை வருட காலத்தில் ஒரு துரும்பையும் அசைக்காதவர்கள், அதுமாத்திரமல்ல வெளிநாட்டு நீதிபதிகளை அனுமதிக்க மறுத்தவர்கள் ஐக்கிய நாடுகளில் ஒப்புக் கொண்ட விடயங்கள் எதனையும் நடைமுறைப்படுத்தாதவர்கள் இனிவரும் ஒன்றரை வருட கால அவகாசத்தில் எதை செய்ய போகின்றார்கள்.

இராணுவத்தை விசாரிக்க முடியாது, சர்வதேச நீதிபதிகளை அனுமதிக்க முடியாது, விசாரணை குழுவை அமைக்க முடியாது என்றால் அதற்கு பின்னர் கால அவகாசம் எதற்கு? இது இரா.சம்பந்தனுக்கு விளங்கவேண்டும். ஏற்கனவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அரைவாசி பாராளுமன்ற உறுப்பினர்கள் ஐக்கிய நாடுகள் இலங்கை அரசுக்கு கால அவகாசம் வழங்க கூடாது என்று எழுதி அனுப்பியிருகின்றர்கள்.

பல மாகாண உறுப்பினர்கள் குடியியல் சமூக அமைப்புகள் என்பன கால அவகாசம் வழங்க கூடாது என்று வலியுறுத்தியிருக்கி ன்றார்கள். எனவே கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இதனை விளங்கிகொண்டு உடனே கால நீடிப்பு வழங்க கூடாது என்று வெளிப்படையாக உலக அரங்கிற்கும் ஐக்கிய நாடுகளுக்கும் அறிவிக்க வேண்டும்.” என்றுள்ளார்.

0 Responses to இலங்கைக்கு ஐ.நா. கால அவகாசம் வழங்க வேண்டும் என்று சம்பந்தன் கூறியிருப்பது ஏற்புடையதல்ல: பிரேமச்சந்திரன்

Post a Comment

Followers

அதிகமாக வாசிக்கபட்டவை...