Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

முல்லைத்தீவு கேப்பாபுலவில் விமானப்படை பொருத்தியிருந்த “உள்நுழைய வேண்டாம்; உள்நுழைந்தால் சுடப்படுவீர்கள்” என்று அச்சுறுத்தல் விடுக்கும் அறிவித்தல் பலகை நீக்கப்பட்டுள்ளது. அதற்குப் பதிலாக, “இது விமானப்படை முகாம்; உட்செல்லத் தடை” என்கிற அறிவிப்பு விடுக்கும் பலகை பொருத்தப்பட்டுள்ளது.

தமது காணிகளைக் கோரி கேப்பாபுலவு மக்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை 20வது நாளாக போராட்டத்தினைத் தொடர்ந்து வருகின்ற நிலையிலேயே, நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை, “இது விமானப்படையின் காணியாகும். தேவையில்லாமல் உட்செல்லத் தடை. தேவையில்லாமல் உட்சென்றால் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காவீர்கள்.” என்று அச்சுறுத்தும் அறிவிப்பு பலகை விமானப்படையினால் பொருத்தப்பட்டிருந்தது.

குறித்த அறிவித்தல் பலகை ஊடகங்களில் வெளியானதை அடுத்து, விமர்சனங்கள் எழுந்திருந்தது. இந்த நிலையிலேயே விமானப்படை குறித்த அறிவிப்பு பலகையை நீக்கிவிட்டு, புதிய அறிவித்தல் பலகையைப் பொருத்தியுள்ளது.

0 Responses to கேப்பாபுலவில் பொருத்தியிருந்த ‘அச்சுறுத்தல்’ விடுக்கும் அறிவிப்புப் பலகையை விமானப்படை நீக்கியது!

Post a Comment

Followers

அதிகமாக வாசிக்கபட்டவை...