Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஜெயலலிதாவின் ஊழல் சொத்துக்குவிப்பு வழக்கில், ஆஜராகாமல் இருக்க எப்படியெல்லாம் மிரட்டப்பட்டேன்? யார் யாரெலாம் மிரட்டினார்கள் என்று அரசு வழக்கறிஞர் ஆச்சாரியா பரபரப்பு தகவலை கூறியுள்ளார்.  ஜெயலலிதா சொத்துகுவிப்பு வழக்கிலிருந்து விலகுமாறு பாஜக மேலிடமும் அப்போதைய பிஜேபி கர்நாடக அரசும் என்னை ராஜினாமா செய்யுமாறு அழுத்தம் கொடுத்திருந்தாலும், நாகரிக‌த்தின் அடிப்படையில் அவர்கள் பெயரை குறிப்பிடவில்லை.

ஜெயலலிதா தரப்பை எதிர்த்து வழக்காடும் அரசு வழக்கறிஞர் பதவியை ராஜினாமா செய்யும்படி பாஜக மேலிடத் தலைவர்கள் சிலர் எனக்கு தொலைபேசி மூலமாகவும் நேரிலும் நெருக்கடி கொடுத்தார்கள்.

அப்போதைய கர்நாடக பாஜக அரசும்கூட (சதானந்த கவுடா முதல்வர்), "உங்களுக்கு எதற்கு வீண் சிக்கல்? அரசு வழக்கறிஞர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, அட்வகேட் ஜெனரல் பதவியைத் தொடருங்கள். தேவைப்பட்டால் வேறு சில வசதிகளும் ஏற்பாடு செய்கிறோம் என அனுதாபம் காட்டுவதுபோல் மிரட்டியது.

நான் அட்வகேட் ஜெனரல் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, ஜெயலலிதாவின் வழக்கில் அரசு வழக்கறிஞராகத் தொடர்ந்தேன். இதனால் என் மீது அவர்களுக்குக் கடுங்கோபம் ஏற்பட்டது.

ஜெயலலிதாவின் வழக்கு காலத்தில் எனக்கு தினமும் 10 தொலைபேசி மிரட்டல்களாவது வரும். கண்டபடி திட்டுவார்கள். ஒருகட்டத்தில், கர்நாடக உயர் நீதிமன்றத்திலும், லோக் ஆயுக்தா நீதிமன்றத்திலும் என் மீது அவதூறு வழக்குகளைத் தொடுத்தார்கள்.

நீதிமன்ற வளாகத்தில் அவதூறான துண்டறிக்கைகளைப் பரப்புவது, சுவரொட்டிகளை ஒட்டுவது, சாலையில் காரை இடிப்பது போன்று வருவது... இப்படிப் பல வகைகளிலும் தொல்லைகள் வரும். எனக்கு மன உளைச்சல் தந்தது இவையெல்லாம் கூட இல்லை, ஜெயலலிதா தரப்பில் தினமும் மனு மேல் மனு போட்டு வழக்கை இழுத்தடித்தார்கள்.

ஒரு வருஷத்தில் முடிய வேண்டிய வழக்கு முடிவே இல்லாமல் நீண்டது. அதனால்தான், நிம்மதி இழந்து ராஜினாமா செய்தேன். பணம், சொத்து, பதவி, புகழ் எல்லாவற்றையும்விட எனக்கு தர்மமும் என்னுடைய கொள்கையும் முக்கியம் என்று கூறியுள்ளார்.

0 Responses to ஜெயலலிதாவின் சொத்துக்குவிப்பு வழக்கில் ஆஜராகாமல் இருக்க எப்படியெல்லாம் மிரட்டப்பட்டேன்?: ஆச்சார்யா

Post a Comment

Followers

அதிகமாக வாசிக்கபட்டவை...