Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

மாலபே தனியார் மருத்துவக் கல்லூரியின் (SAITM -South Asian Institute of Technology and Medicine) பிரதான நிறைவேற்று அதிகாரியான மருத்துவர் சமீர சேனாரத்னவின் வாகனத்துக்கு நேற்று திங்கட்கிழமை மாலை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

முகத்தை முழுமையாக மறைக்கும் தலைக்கவசம் அணிந்த இருவரால், மாலபே தனியார் மருத்துவக் கல்லூரிக்கு அருகில் வைத்தே துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது. இதில், அவருக்கு பாதிப்பு ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

மருத்துவக் கல்லூரியின் பிரதான கட்டடத்திலிருந்து சுமார் 700 மீற்றருக்கு அப்பால் உள்ள சந்திரிகா குமாரதுங்க மாவத்தைக்கு அண்மையில் வைத்தே இந்த துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

துப்பாக்கிப் பிரயோகத்தில் அவருடைய காரின், முன்பக்கத்தையும் பின்பக்கத்தில் வலதுபக்கத்தில் உள்ள கதவையும் துப்பாக்கிச் சன்னங்கள் துளைத்துச் சென்றுள்ளன. காரின் மீது துப்பாக்கிப் பிரயோகங்கள் நான்கு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.

பிரதான நிறைவேற்று அதிகாரியான டொக்டர் சமீர சேனாரத்ன, தன்னுடைய கடமைகளை முடித்துகொண்டு, ராஜகிரியவில் உள்ள தன்னுடைய வீட்டைநோக்கிப் பயணித்துகொண்டிருந்த போதே, இந்தத் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்த பொலிஸார், சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முடுக்கிவிட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.

0 Responses to மாலபே தனியார் மருத்துவக் கல்லூரியின் நிறைவேற்று அதிகாரியின் வாகனத்தின் மீது துப்பாக்கி சூடு!

Post a Comment

Followers

உலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.