Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கடந்த காலத்தில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பொறுப்புக்கூறலுக்கான பொறிமுறையை முன்னெடுப்பதற்காக இலங்கை அரசாங்கத்திற்கு மேலும் இரண்டு ஆண்டுகளை வழங்குவது அர்த்தமற்றது, உடன்பாடில்லாதது என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் மார்ச் மாதம் ஆரம்பிக்கவுள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவைக் கூட்டத் தொடரில், பொறுப்புக்கூறல் விடயத்திற்காக மேலும் இரண்டு வருடகால அவகாசத்தினை அரசாங்கம் கோரவுள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த நிலையிலேயே, கால அவகாசம் வழங்குவது தொடர்பில் வடக்கு மாகாண முதலமைச்சர் கருத்து வெளியிட்டுள்ளார்.

அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “அரசாங்கத்திற்கு 2 வருட கால அவகாசம் வழங்கினால் தமிழ் மக்களின் பிரச்சினைகளை சர்வதேசம் மறந்துவிடும். இதுவரை காலமும் அரசாங்கத்திற்கு ஒரு வருடகாலம் வழங்கப்பட்டது. அந்த கால கட்டத்தில் அரசாங்கத்தினால் குறிப்பிட்ட அளவு தான் செய்ய முடிந்துள்ளது. தொடர்ந்தும் சிலகாலங்களை கொடுப்பதில் பிழை இருக்க முடியாது. கால அவகாசம் கொடுப்ப து நன்மை தான்.

காலஅவகாசம் வழங்கும் போது இவ்வளவு காலமும் எடுத்த நடவடிக்கைகளில் மக்களுக்கு எந்தளவிற்கு நன்மை கிடைத்துள்ளதென ஆராய்ந்து பார்த்து கால அவகாசத்தை வழங்க முடியும். அரசாங்கம் என்ன செய்கின்றது என்பதை மாதாந்தம் அறிய கூடியவாறு ஏதாவது ஒரு செயற்திட்டத்தை வகுக்குமாறு கூறமுடியும்.

இதுவரையில் கொடுக்கப்பட்ட கால அவகாசங்களில் எந்தளவு செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அந்த செயற்பாடுகள் மக்களுக்கு நன்மை அளித்துள்ளனவா என ஐக்கிய நாடுகள் ஆராய்ந்து பார்க்க வேண்டும். இரண்டு வருட கால அவகாசம் கொடுப்பதில் எனக்கு உடன்பாடில்லை. குறுகிய காலமும், அதிகளவான மேற்பார்வையும் முக்கியமானது.” என்றுள்ளார்.

0 Responses to பொறுப்புக்கூறலுக்காக இலங்கைக்கு மேலும் இரண்டு ஆண்டுகள் வழங்குவதில் உடன்பாடில்லை: விக்னேஸ்வரன்

Post a Comment

Followers