Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

காணாமற்போனோர் தொடர்பிலான அலுவலகம் (தனிப்பணியகம்) அமைப்பது தொடர்பிலான சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் ஊடக அமைச்சருமான கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் மாநாட்டில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

காணாமற்போனோர் தொடர்பிலான அலுவலகம் தேவை ஏற்பட்டால் தனிப்பட்ட நபர்கள் அல்லது நிறுவனங்களுடன் உடன்படிக்கை கைச்சாத்திட அதிகாரம் வழங்கப்பட்டிருந்தது. இந்த அதிகாரம் இரத்து செய்யப்படும் வகையிலேயே சட்ட திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று கயந்த கருணாதிலக்க கூறியுள்ளார்.

கடந்த வருடம் ஓகஸ்ட் மாதம் 23ஆம் திகதி, 16ஆம் இலக்க சட்டத்தின் அடிப்படையில் காணாமற்போனோர் தொடர்பிலான அலுவலகச் சட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. எனினும், குறித்த சட்டம் இன்னமும் வர்த்தமானியில் வெளியிடப்படவில்லை.

0 Responses to காணாமற்போனோர் அலுவலகம் அமைப்பது குறித்த சட்டத்தில் திருத்தம்; அரசாங்கம் தீர்மானம்!

Post a Comment

Followers