Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இன்று தமிழக முதல்வராக வி.கே.சசிகலா பதவி ஏற்க இருந்த நிலையில், ஆளுநர் வருகை தள்ளிப்போனதால் முதல்வர் பதவி ஏற்பு நிகழ்வு ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது.

இன்று தமிழகம் வந்து பல்வேறு நிகழ்வுகளில் கலந்துக்கொள்வதாக இருந்த ஆளுநர் வித்யாசாகர் ராவ், தமது நிகழ்ச்சிகளை ரத்து செய்துவிட்டு, மும்பை சேர்த்துள்ளார்.

தமிழகத்தில் ஸ்திரமான ஆட்சி நீடிக்குமா என்று ஆளுநருக்கு சந்தேகம் ஏற்பட்டு உள்ளதாகவும் தெரிய வருகிறது.இதையடுத்து, சட்டமன்ற உறுப்பினர் பதவியில்லாத ஒருவருக்கு முதல்வர் ஆட்சி அதிகாரம் வழங்கலாமா என்று அவர் சட்ட வல்லுனர்களிடம் ஆலோசனை கேட்டுள்ளாராம்.

அட்டர்னி ஜெனரல் ஒப்புதல் வேண்டும் என்றும் அப்படி கிடைக்கவில்லை என்றால் சொத்து குவிப்பு வழக்கின் தீர்ப்புக்கு பின்பே பதவி ஏற்புக்கு ஒத்துக்கொள்ளுவதாக ஆளுநர் கூறியுள்ளார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

0 Responses to சசிகலா முதல்வராக பதவியேற்கும் நிகழ்வு ஒத்திவைப்பு!

Post a Comment

Followers