Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஆதரவு பன்னீருக்கா, சசிகலாவுக்கா என்கிற ஆலோசனையில் புதுச்சேரி அதிமுக எம்.எல்.ஏக்கள் உள்ளனர். தமிழகத்தில் சசிகலாவுக்கு எதிராக, முதல்வர் பன்னீர்செல்வம் களமிறங்கியதையடுத்து, அதிமுக எம்.எல்.ஏக்கள் இரண்டாக பிரிந்துள்ளனர். இந்நிலையில், புதுச்சேரி அதிமுக சட்டமன்ற கட்சித் தலைவர் அன்பழகன், புதுச்சேரி அதிமுக எம்.எல்.ஏக்களுடன் இன்று ஆலோசனை நடத்தினர். அங்கு மொத்தம் 4 அதிமுக எம்.எல்.ஏக்கள் உள்ளனர்.

முதல்வர் பன்னீர்செல்வத்துக்கு தங்களது ஆதரவை தெரிவிப்பதா அல்லது அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவுக்கு ஆதரவு தெரிவிப்பதா என்பதற்காக இந்த ஆலோசனை நடைபெறுகிறது. இந்த ஆலோசனைக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த அன்பழகன், புதுச்சேரி அதிமுகவின் ஆதரவு யாருக்கு என்ற முடிவு விரைவில் அறிவிக்கப்படும் என்றும், புதுச்சேரி நலனுக்காவும், புதுச்சேரி அதிமுக நலனுக்காகவும் விரைவில் நல்ல முடிவு எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

0 Responses to ஆதரவு பன்னீருக்கா, சசிகலாவுக்கா: ஆலோசனையில் புதுச்சேரி அதிமுக எம்.எல்.ஏக்கள்

Post a Comment

Followers

உலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.

அதிகமாக வாசிக்கபட்டவை...