Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

முல்லைத்தீவு கேப்பாபுலவு மக்கள் முன்னெடுத்துள்ள காணி மீட்புப் போராட்டத்தினை அரசாங்கம் கண்டுகொள்ளவில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

விரக்தியின் உச்சத்துக்குச் சென்றுள்ள கேப்பாபுலவு மக்கள் தற்கொலை செய்துகொள்ளும் நிலைக்குச் சென்றிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே சிவஞானம் சிறீதரன் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

84 குடும்பங்களின் 40 ஏக்கருக்கும் அதிகமான காணிகளை விமானப்படையினர் பிடித்து வைத்துள்ளனர். அந்தக் காணிகளை விடுவிக்கப் போரியே கேப்பாபுலவு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், தமக்கு நேற்று மாலைக்குள் தீர்வு வழங்கப்படாவிட்டால், தம்மை மாய்த்துக் கொள்ளும் அளவுக்கு போராட்டத்தை கொண்டு செல்லப் போவதாக போராட்டக்காரர்கள் அறிவித்திருந்தனர்.

இந்த நிலையில் சிவஞானம் சிறீதரன் கூறியுள்ளதாவது, “யுத்தம் நடந்து முடிந்து பல வருடங்கள் கடந்துகொள்ள போதும் இடம்பெயர்ந்த மக்கள் தமது சொந்த இடங்களுக்கு திரும்ப முடியாதவாறு இராணுவத்தினர் தடையாக இருக்கின்றனர். வடக்கு, கிழக்கில் ஏறத்தாள 40 வீதமான காணிகள் முப்படையினர் வசம் உள்ளது. குறிப்பாக வடக்கில் 56 ஏக்கர் காணிகள் படையினர் வசமுள்ளது. இவ்வாறான சூழ்நிலையிலேயே கேப்பாபுலவு மக்கள் தமது உயிரையும் பணயம் வைத்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த மக்களின் காணிகளை மீளவழங்காது சமாதானம் பேசுவதிலும், நல்லிணக்கம் பற்றி பேசுவதிலும் பயனில்லை. சிங்கள தலைவர்கள் இது விடயத்தில் பாராமுகமாக இருக்கின்றனர். சுமார் 70 வருடங்களுக்கு மேலான யுத்த சூழலால் 3 இலட்சத்துக்கும் அதிகமான உயிர்கள் இழக்கப்பட்டுள்ளன. அது மாத்திரமன்றி மக்கள் சொந்த இடங்களுக்கு திரும்ப முடியாதுள்ளனர். உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் இந்த மக்களின் பிரச்சினைக்கு உடனடியாக தீர்வொன்றை வழங்குமாறு ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட சிங்களத் தலைவர்களிடம் கோரிக்கை விடுக்கின்றேன்.” என்றுள்ளார்.

0 Responses to கேப்பாபுலவு மக்களின் போராட்டத்தை அரசாங்கம் கண்டுகொள்ளவில்லை: சிறீதரன்

Post a Comment

Followers

உலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.