மத்திய அரசின் மறைமுக வரி வருவாய் கடந்த ஏப்ரல் முதல் ஜனவரி வரை 23.9 சதவீதம் அதிகரித்துள்ளது. நேரடி வரி வருவாயும் 10 சதவீதத்துக்கு மேல் உயர்ந்துள்ளது. வரிகள் மூலமான வருவாயை அதிகரிக்க மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. நடப்பு நிதியாண்டில் இந்த மறைமுக வரி வருவாய் ₹16.99 லட்சம் கோடி ரூபாய் வசூலிக்க இலக்கு நிர்ணயித்திருந்தது. இந்நிலையில், கடந்த ஜனவரி மாதம் வரை இந்த வரி வசூல் 12.85 லட்சம் கோடியை எட்டியுள்ளது. மொத்த இலக்கில் 76 சதவீதம் எட்டப்பட்டுள்ளது. ரூபாய் நோட்டு மதிப்பு நீக்கத்தால் பொருளாதார சரிவு ஏற்பட்டபோதிலும், ஜனவரியில் கலால் வரி போன்றவற்றின் மூலம் மறைமுக வரி வருவாய் 16.9 சதவீதம் உயர்ந்துள்ளது.
0 Responses to மறைமுக வரி வருவாய் அபாரமாக உயர்வு: மத்திய அரசு