Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் கொலைச் சதி முயற்சி திட்டமிடப்பட்ட ஓர் நாடகம் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வடக்கு- கிழக்கில் இராணுவ முகாம்களை நிரந்தரமாகப் பேணும் நோக்கிலேயே இவ்வாறு திட்டமிடப்பட்ட நாடகம் அரங்கேற்றப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முதலமைச்சர் கூறியுள்ளதாவது, “எம்.ஏ.சுமந்திரன் கொலைச் சதி முயற்சி ஓர் திட்டமிட்ட நாடகமாகும். வடக்கில் இராணுவ முகாம்களை நிரந்தரமாக அமைக்கும் நோக்கில் இவ்வாறு சதித் திட்டம் தீட்டப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். எனினும் சுமந்திரனுக்காக கொலை அச்சுறுத்தல் பற்றி நீதிமன்றில் எதுவும் கூறப்படவில்லை.

சுமந்திரன் கொலைச் சதி முயற்சி குறித்து கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடமிருந்து போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளது. அது குறித்தே நீதிமன்றில் குறிப்பிடப்பட்டது. மெய்யாகவே சுமந்திரனை கொலை செய்ய முயற்சிக்கப்பட்டிருந்தால், அது குறித்து நீதிமன்றில் பொலிஸார் அறிவித்திருப்பார்கள். எனவே, உண்மை கண்டறியப்பட வேண்டியது அவசியம்.

காலத்திற்கு காலம் இவ்வாறான அச்சுறுத்தல்கள் பற்றி தகவல்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. கிளிநொச்சி ஜெயகுமாரி சம்பவம் தொடர்பிலும் இவ்வாறு கருத்து வெளியிடப்பட்டது. யாழ்ப்பாணத்தில் படை முகாம்களை நிரந்தரமாக அமைக்கும் நோக்கில் இவ்வாறு தகவல்கள் வெளியிடப்படுகின்றனவா என்ற சந்தேகம் எழுகின்றது.” என்றுள்ளார்.

0 Responses to சுமந்திரன் மீதான கொலைச் சதி முயற்சி பெரும் நாடகம்: விக்னேஸ்வரன்

Post a Comment

Followers