அவுஸ்திரேலியாவுக்கு தஞ்சம் கோரிச் சென்று நாவுறு- பப்புவா நியுகினி தீவுகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கையின் புகலிட கோரிக்கையாளர்களுக்கு வழக்குகளை எதிர்நோக்காமல் மீண்டும் தாய்நாடு திரும்ப முடியும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
அவுஸ்திரேலியாவுக்கு விஜயம் செய்துள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்வியொன்றுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவுஸ்திரேலியப் பிரதமருடன் நடத்திய பேச்சுவார்த்தையின் போது ஆள்கடத்தலை தடுப்பது தொடர்பான ஒத்துழைப்பு பற்றியும் கருத்துக்களை பரிமாறிக் கொண்டுள்ளார்.
2013ஆம் ஆண்டின் பின்னர் எந்தவொரு இலங்கையரும் படகுகள் மூலம் புகலிடம் கோரி அவுஸ்திரேலியா செல்லவில்லை என்று அறிவிக்கப்படுகிறது. ஆனால் நாவுறு பப்புவா நியுகினி ஆகிய இடங்களில் உள்ள முகாம்களில் ஈரான், ஆப்கானிஸ்தான், இலங்கை போன்ற நாடுகளைச் சேர்ந்த புகலிடக் கோரிக்கையாளர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள்.
அவுஸ்திரேலியா இவர்களுக்கு குடியேறுவதற்கான அனுமதியை மறுத்திருக்கிறது. இவ்வாறான இலங்கையர்கள் நாடு திரும்புவதில் எதுவித பிரச்சினையும் இல்லை என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

0 Responses to நாவுறு தீவுகளில் தங்கியுள்ள இலங்கை அகதிகள் நாடு திரும்ப முடியும்: ரணில்