முல்லைத்தீவு கேப்பாபுலவிலுள்ள மக்களின் காணிகளை விடுவிப்பது தொடர்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் பாதுகாப்பு அமைச்சகம் உள்ளிட்ட தரப்புக்களுடன் ஏற்கனவே இரு தடவைகள் பேசியுள்ள நிலையில், எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. ஆகவே, அடுத்த கட்டமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் பேசுவதற்கு தீர்மானித்துள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
கேப்பாபுலவு மக்கள் முன்னெடுத்துள்ள காணி மீட்புப் போராட்டம் நேற்று புதன்கிழமை 16வது நாளாக தொடர்ந்தது. போராட்டக்களத்திற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் வருகை தந்தார். அவர், போராட்டக்காரர்களோடு பேசினார். அவர்களின் கோரிக்கைகள் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவரோடு தொலைபேசியில் உரையாடினார். இதன்போதே, இரா.சம்பந்தன் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, அங்கு கருத்து வெளியிட்ட சிவஞானம் சிறீதரன், “மக்களது நியாயமான போராட்டங்கள் வெற்றி பெறுவதற்கான முழுமையான ஒத்துழைப்பினை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வழங்கும். முல்லைத்தீவில் நடைபெற்று வரும் காணி மீட்புப் போராட்டங்களில் ஈடுபட்டு வருபவர்களுக்கான தீர்வினை நாம் பெற்றுத்தருவோம்.”என்றுள்ளார்.

0 Responses to கேப்பாபுலவு காணிப் பிரச்சினை தொடர்பில் பிரதமருடன் பேசிப் பயனில்லை; ஜனாதிபதியுடன் பேசத் தீர்மானம்: சம்பந்தன்