Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

போர்க்குற்றம் தொடர்பிலான உள்ளக விசாரணையில் சர்வதேச நீதிபதிகளைக் கோருவது தமிழீழத்தை மறைமுகமாக கோருவதற்கு ஒப்பானது என்று ஜாதிக ஹெல உறுமயவின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான பட்டாலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

இராணுவம் இழைத்திருக்கும் குற்றங்கள் தொடர்பாக விசாரணை செய்யவேண்டும் என தமிழர் தரப்பு கூறுவதுபோன்று, தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான விசாரணைகளை முன்னெடுப்பதற்காக விடுவிக்கப்பட்ட 12,000 முன்னாள் போராளிகளையும் மீண்டும் கைது செய்ய வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச நீதிபதிகளை வரவழைத்து, சர்வதேச விசாரணைகளின் மூலமாக தமிழ் மக்களுக்கு நீதியைப் பெற்றுக்கொடுப்பது தொடர்பில் ஆராய வேண்டும் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கூறியிருக்கும் நிலையில், இதுகுறித்து ஊடக மொன்றுக்கு வழங்கிய செவ்வியில் அமைச்சர் சம்பிக்க ரணவக்க மேற்கண்ட விடயங்களைக் கூறியுள்ளார்.

இராணுவம் யுத்தவிதிமுறைகளை மீறி மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டிருந்தால் அவற்றை விசாரணை செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ள அவர், அதேபோல யுத்தத்தில் ஈடுபட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பான விசாரணைகளுக்கு அனைத்து முன்னாள் போராளிகளையும் கைது செய்ய வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

0 Responses to போர்க்குற்ற விசாரணையில் சர்வதேச நீதிபதிகளைக் கோருவது தமிழீழத்தைக் கோருவதற்கு ஒப்பானது: சம்பிக்க ரணவக்க

Post a Comment

Followers

அதிகமாக வாசிக்கபட்டவை...