Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஹெச்ஐவி பரவுவதை தடுப்பதில் மத தலைவர்கள் முக்கிய பங்காற்றலாம் என்று தான்சானியாவில் நடத்தப்பட்ட அறிவியல் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

மத குருக்கள் சுன்னத்து செய்துகொள்வது பற்றி அவர்களின் சமூகங்களிடம் கலந்துரையாடினால், ஒரு மில்லியனுக்கு மேலானோர் சுன்னத்து செய்துகொள்ள சம்மதிக்கலாம் என்று அமெரிக்காவின் கோர்நெல் மற்றும் தான்சானியாவின் மவான்ஸா பல்கலைக்கழகங்களின் விஞ்ஞானிகளால் நடத்தப்பட்டுள்ள இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

சுன்னத்து செய்துகொள்வது இயல்பான, வேற்றுப்பாலின உணர்வுடைய ஆண்களிடம் ஹெச்ஐவி பரவுவதை சுமார் 60 சதவீதம் குறைக்கிறது என்று உலக சுகாதார நிறுவனம் குறிப்பிடுகிறது.இந்த ஆய்வின் முடிவுகள் "த லென்செட்" என்ற மருத்துவ இதழில் வெளியிடப்பட்டுள்ளது.

0 Responses to ஹெச்ஐவி பரவுவதை தடுப்பதில் மத தலைவர்கள் முக்கிய பங்காற்றலாம்: அறிவியல் ஆய்வுகள்

Post a Comment

Followers