ஐக்கிய நாடுகள் மனித உரிமைகளுக்கான போராட்டத்தினை தொடர்ந்தும் முன்னெடுத்து வருகின்ற போதிலும், சில உலகத் தலைவர்கள் அதற்கு அச்சுறுத்தல் விடுத்து வருகின்றனர் என்று ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் சையிட் அல் ஹூசைன் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 34வது கூட்டத் தொடர் ஜெனிவாவில் நேற்று திங்கட்கிழமை ஆரம்பமாகியது. அங்கு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் கூறியுள்ளதாவது, “மனித உரிமைகளுக்கு எதிராக பிரசாரங்களில் ஈடுபட்டுவரும் சில அரசியல் தலைவர்கள், சர்வதேச அல்லது பிராந்திய ஒப்பந்தங்களிலிருந்து விலகுவதாகவும், அவ்வாறான அமைப்புக்களிலிருந்து விலகப் போவதாகவும் அச்சுறுத்தி வருகின்றனர்.
கடந்த ஏழு தசாப்தங்களில் உலக நாடுகள் மனித உரிமை விடயத்தில் அடைந்திருக்கும் முன்னேற்றத்தை அவர்கள் மீட்டுப் பார்க்க வேண்டும். இவ்வாறான அச்சுறுத்தல்களில் அவர்கள் வெற்றிபெற்றால் உலக மனித உரிமையில் எதனை இழக்கப் போகிறோம் என்பதையும் பார்க்கவேண்டும்.
ஐக்கிய நாடுகள் சபை ஸ்தாபிக்கப்பட்ட பின்னர் மனித உரிமைகள் தொடர்பான பல்தரப்பு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டு திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அது மாத்திரமன்றி உலகளாவிய காலமுறையில் மீளாய்வு மேற்கொள்ளப்படுகிறது.
ஐக்கிநாடுகள் மனித உரிமை பேரவையின் அலுவலகம் பிராந்திய மற்றும் சர்வதேச அமைப்புக்கள், சகல மட்டத்திலுமான சிவில் அமைப்புக்கள் ஆகியவற்றுடன் இணைந்து இணங்கப்பட்ட விடயங்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றனவா என்பதைக் கண்காணித்து வருகிறது.” என்றுள்ளார்.

0 Responses to உலகத் தலைவர்கள் சிலர் மனித உரிமைகளுக்கு அச்சுறுத்தல் விடுக்கின்றனர்: சையிட் அல் ஹூசைன்