இந்திய வெளியுறவுச் செயலாளர் எஸ்.ஜெய்சங்கர் அண்மையில் இலங்கைக்கு மேற்கொண்ட விஜயமானது தமிழ் மக்களின் நலன் சார்ந்தது அல்ல. அது, இந்திய நலன் சார்ந்தது மட்டுமே என்று தேசிய சமாதான பேரவை தெரிவித்துள்ளது.
தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் தீர்வொன்றைக் காண்பதற்கான அழுத்தத்தை இலங்கை அரசாங்கத்தின் மீது இந்திய வெளியுறவுச் செயலாளர் விடுக்கவில்லை. மாறாக, தனது நாட்டின் தேசிய பாதுகாப்பு தொடர்பாகவே அதிக கவனம் செலுத்தினார் என்று தேசிய சமாதான பேரவையின் நிறைவேற்று பணிப்பாளர் ஜெஹான் பெரேரா சுட்டிக்காட்டியுள்ளார்.
சீனாவுடன் இலங்கை செய்துகொள்ளவுள்ள அம்பாந்தோட்டை முதலீட்டு வலயம் மற்றும் திருகோணமலை துறைமுகத்தின் முன்னெடுக்க உத்தேசிக்கப்பட்டுள்ள இந்திய பொருளாதார நடவடிக்கைகளில் இலங்கை ஆர்வம் காட்டாமல் இருப்பது தொடர்பிலுமே இந்திய வெளியுறவுச் செயலாளர் இந்த விஜயத்தின் போது பிரதான கவனம் செலுத்தினார் என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

0 Responses to இந்திய வெளியுறவுச் செயலாளரின் இலங்கைப் பயணம் தமிழர் நலன் சார்ந்தது அல்ல: தேசிய சமாதான பேரவை