மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான கூட்டு எதிரணி ஆட்சி அதிகாரத்தினை நோக்கி வருவதில் இந்தியா ஆர்வம் கொண்டிருக்கவில்லை. மாறாக, அந்த அணிக்குள் பிளவுகள் ஏற்பட வேண்டும் என்று இந்தியா விருப்பம் கொண்டுள்ளதாக இந்தியப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இலங்கையின் தற்போதைய தருணங்கள் தொடர்பில் கவனம் செலுத்தி வரும் இந்தியா, மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் அரசியலில் பிரவேசித்திருப்பதன் ஊடாக அரசியல் வட்டாரத்தில் பல மாற்றங்கள் ஏற்படுவதுடன், பல பிளவுகளும் ஏற்படலாம் என்று கருதுகின்றது. தற்போதைய இலங்கை அரசியல் சூழ்நிலைகள் மற்றும் சம்பவங்களை கருத்திற் கொண்டு ஆராயும் போது இந்த விடயம் தெளிவாகின்றது. இதனை இந்தியா அக்கறையோடு பார்க்கின்றது.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை தொடர்பான முக்கிய பிரதிநிதியான ராம் மாதவ், கடந்த பெப்ரவரி 10ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரை கொழும்பில் வைத்து சந்தித்துள்ளதாகவும் அந்தச் செய்தி கோடிட்டுக் காட்டியுள்ளது.

0 Responses to மஹிந்த தலைமையிலான அணிக்குள் பிளவு?; இந்தியா விருப்பம்!