Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கடந்த 2 நாட்களில் நடந்த நிகழ்வுகள் எனது மவுனத்தை கலைத்துவிட்டன என்று பி.எச்.பாண்டியன் கூறியுள்ளார்.

இவர்கள் என்னை விஷம் வைத்து கொன்றுவிடுவார்கள் என பயமாக இருக்கிறது என என்னிடமும் சோவிடமும் ஜெயலலிதா கூறினார், நாங்கள் அவருக்கு ஆறுதல் சொன்னோம் என மனோஜ் பாண்டியன் ,பி.எச்.பாண்டியன் செய்தியாளர் சந்திப்பின்போது தெரிவித்தார்.

கடந்த 2 நாட்களாக நடக்கும் நிகழ்வுகள் என் மௌனத்தை கலைத்து விட்டது..
போயஸ் கார்டன் வீட்டில் ஜெயலலிதாவிற்கு ஏதோ நடந்துள்ளது..அதை மறைக்கவும் மருத்துவமணைக்கு கொண்டு சென்றுள்ளனர்.முதல்வர் உயிரிழந்த நிலையில் மருத்துவமணையில் இருந்த சசிகலா, அமைச்சர்கள் உள்ளிட்ட ஒருவருக்கு கூட கண்களில் கண்ணீர் வரவில்லை.

2011 ம்ஆண்டு ஜெயலலிதா முதல்வராக பொறுப்பேற்ற உடனேயே கட்சியில் இருந்து நீக்கிய சசிகலாவின் உறவினர்களே ஜெயலலிதாவின் உடலை சுற்றி
இருந்தனர்..ஜெயலலிதா உயிரிழந்து கல்லறை கூட காயாத நிலையில் 20 நாட்களில் பொதுச்செயலாளராக சசிகலா நியமித்து கொண்டார்.

எனக்கும் எனது குடும்பத்திற்கும் எந்த உறவும் இல்லை என கூறி மன்னிப்பு
கடிதம் கொடுத்து மீண்டும் கட்சியில் உறுப்பினராக இணைந்தவர் தான்
சசிகலா..மருத்துவமணைக்கு கொண்டு செல்லும் முன்பு வீட்டில் என்ன நடந்தது என்பது குறித்து விசாரணை நடத்த வேண்டும்.

கட்சி பதவியோ கவுன்சிலர் பதவியோ கூட வேண்டாம் என்பவர் எப்படி முதல்வராக முடியும் பொதுச்செயலாளர் என்பவர் பொதுக்குழு மூலமாக தேர்வு செய்யக்கூடாது.அடிப்படை தொண்டர்கள் தான் முடிவு செய்ய வேண்டும் என எம்.ஜி.ஆர் முடிவு செய்திருந்தார்..அதிமுக வின் சட்டப்படி இது தான் நடைமுறை.. ஆண்டு ஒன்றுக்கு டாஸ்மாக் மூலம் 17000 கோடி ரூபாய் வருமானத்தை சசிகலா குடும்பம் பெற்று வருகிறது...

ஜெயலலிதா,தனதுஉடமைகள் மற்றும் சொத்துக்கள் மக்களுக்கு போய் சேர வேண்டும் என ஏற்கனவே கேட்டுக் கொண்டுள்ளார்.. அதனை செய்ய வேண்டிய கடமை எனக்கு உள்ளது.. அரவக்குறிச்சி தேர்தலின் போது ஜெயலலிதாவின் கை ரேகை பெற்றது போல சொத்து விவகாரத்தில் நடக்க கூடாது.என்பதற்காக இதனை முன்கூட்டியே சொல்கிறேன்.

இவ்வாறு பி.எச்.பாண்டியன் இன்று செய்தியாளர்களுடம் தெரிவித்தார்.

0 Responses to தூள் தூளாகும் சசி இமேஜ்: பி.எச்.பாண்டியன்

Post a Comment

Followers