Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான பாதுகாப்புத் தலைமைச் செயலாளர் ஜிம் மத்தீஸ் திங்கட்கிழமை திடீரென ஈராக்குக்கு விஜயம் செய்துள்ளதுடன் உங்களது எண்ணெய்யை சூறையாடுவதற்காக நாம் அதாவது அமெரிக்கப் பாதுகாப்புப் படையினர் ஈராக்கில் முகாமிட்டிருக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.

பெண்டகனின் தலைமை பாதுகாப்பு அதிகாரியாகப் பதவியேற்ற பின் முதன் முறையாக ஈராக்குக்கு விஜயம் செய்துள்ள ஜிம் மத்தீஸ் ஈராக்கில் ISIS வசமிருக்கும் மோசுலின் இன்னும் சில பகுதிகளையும் எவ்வாறு மீட்பது என்பது தொடர்பில் அந்நாட்டுப் பாதுகாப்பு அதிகாரிகளுடன் பேசுவார் என எதிர்பார்க்கப் படுகின்றது.

ஆனாலும் 2003 ஆம் ஆண்டு ஈராக் அதிபர் சதாம் ஹுஸ்ஸைன் அமெரிக்கப் படைகளால் கைது செய்யப் பட்டு தூக்கிலிடப் பட்ட பின்னர் அங்கிருக்கும் எண்ணெய் வளத்தை அமெரிக்கா சூறையாடியே வருவதாக ஈராக் இன்னமும் குற்றம் சாட்டி வருகின்றது. இந்நிலையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அண்மையில் தற்காலிகமாக விசா தடை விதித்த ஆப்பிரிக்க நாடுகளில் ஈராக்கும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை அதிபர் டொனால்ட் டிரம்பின் ஈராக் தொடர்பான கொள்கைகளுடன் மத்தீஸ் சற்று முரண்பாடு கொண்டுள்ளதாக ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

0 Responses to அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் ஈராக் விஜயம்

Post a Comment

Followers

உலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.