Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

அதிமுகவில் ஜெயலலிதாவால் நீக்கப்பட்டு, அடிப்படை உறுப்பினர் பதவியில் கூட இல்லாத டிடிவி தினகரன் எங்களுக்கு எப்படி அழைப்பு விடுக்க முடியும் என முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி கேள்வி எழுப்பியுள்ளார். ஓ.பன்னீர்செல்வம் கிரீன்வேஸ் இல்லத்தில் நிருபர்களுக்கு முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி அளித்த நேர்காணலில் கூறியதாவது:

இன்றைய தினம்  டிடிவி தினகரன் அதிமுகவின் துணை பொதுச்செயலாளராக பொறுப்பேற்றுள்ளதாக ஊடகங்களின் மூலம் செய்தியின் மூலம் அறிந்தோம். டிடிவி தினகரன் 2007-ம் ஆண்டு ராஜ்யசபா உறுப்பினராக இருந்த போது ஜெயலலிதா டெல்லி பக்கமே
செல்லக்கூடாது என உத்தரவிட்டார். 3 மாதங்களுக்கு ஒரு முறை பாராளுமன்றத்தில் கையெழுத்து இடவில்லை என்றால் எம்பி பதவி பறிபோகிவிடும் என்பதற்காக 3 மாதங்களுக்கு 1 முறை டிடிவி தினகரன் டில்லி சென்று கையெழுத்து போட்டு வந்தார்.

2007-ம் முதல் ஜெயலலிதா உயிரோடு இருக்கும் வரை டிடிவி தினகரனை கட்சி அலுவலகத்திற்கே, போயஸ்தோட்டத்திற்கோ வர அனுமதிக்கவில்லை. 2011-ம் ஆண்டு சசிகலாவை போயஸ்தோட்டத்தில் ஜெயலலிதா வெளியேற்றியபோது, சசிகலா உட்பட அவரது
குடும்பத்தினரை அதிமுக அடிப்படை உறுப்பினரில் இருந்து நீக்கினார். அப்போது ஜெயலலிதாவால் கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர்களில் டிடிவி தினகரனும் ஒருவர்.

தற்காலிக பொதுச்செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டதே செல்லாது என்ற
நிலையில், சசிகலாவை அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து அவைத்தலைவர்
மதுசூதனன் நீக்கியுள்ளார். அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்க
ஒருவர் எப்படி டிடிவி தினகரனுக்கு பொறுப்பு வழங்க முடியும். எந்த
அடிப்படையில் டிடிவி தினகரன் இன்று பதவியேற்று கொண்டார். டிடிவி தினகரன்
துணை பொதுச்செயலாளர் பதவிக்கு தார்மீக தகுதி இல்லாதவர்.

நாளை ஜெயலலிதா போட்டியிட்ட வெற்றி பெற்ற ஆர்.கே.நகர் தொகுதியில் அவரது
பிறந்தநாளையொட்டி அங்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பல்வேறு நிகழ்ச்சிகளை
நடத்த திட்டமிட்டுள்ளோம். இந்த நிகழ்ச்சிகளுக்கு பிறகு ஓ.பன்னீர்செல்வம்
அங்கு பத்திரிகையாளர்களையும் சந்திக்கவுள்ளார். அந்த நிகழ்ச்சியில்
சசிகலா குடும்பம் சமூகவிரோதிகளை உள்ளே நுழைந்து சட்டம் ஒழுங்கை
சீர்குலைக்க திட்டமிட்டுள்ளதாக எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. ஆகவே
காவல்துறை இந்த விவகாரத்தில் நடுநிலைமையோடு நேர்மையாக செயல்பட்டு சட்டம்
ஒழுங்கை காக்க வேண்டும்.

கட்சியை விட்டு வெளியேறியவர்கள் மீண்டும் திரும்ப வேண்டும் என டிடிவி
தினகரன் உங்கள் அணிக்கு அழைப்பு விடுத்தீரே.

கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் கூட இல்லாத ஓருவர் எப்படி எங்கு
அழைப்பு விடுக்க முடியும். அதிமுகவே ஓ.பன்னீர்செல்வம் பின்னால் உள்ளது.
எங்களுக்கு அழைப்பு விடுத்தன் மூலம் கட்சி அவர்களிடம் இல்லை என்பது
வெளிபடுத்தி இருக்கிறார். அதிமுக தொண்டர்கள் மற்றும் ஜெயலலிதா உண்மையான
விசுவாசிகள் எங்கள் பக்கம் இருக்கிறார்கள். அவர்கள் பின்னால் குடும்பம்
மட்டுமே உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

0 Responses to அதிமுகவின் அடிப்படை உறுப்பினராக கூட இல்லாத டி.டி.வி.தினகரன் எங்களுக்கு எப்படி அழைப்பு விடுக்க முடியும்?: கே.பி.முனுசாமி

Post a Comment

Followers

அதிகமாக வாசிக்கபட்டவை...