Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரின் சொத்து விபரங்களை அறிந்து கொள்ளும் நோக்கில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் விண்ணப்பமொன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

தன்னார்வத் தொண்டு நிறுவனமான ட்ரான்பெரன்ஸி இன்டர்நெசனல் அமைப்பினாலேயே இந்த விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

சுங்கத் திணைக்களம் மற்றும் இலஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழு ஆகியன தொடர்பிலான தகவல்களும் கோரப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 03ம் திகதி முதல் தகவல் அறியும் உரிமைச் சட்டம் அமுலுக்கு வந்துள்ளது. இதனையடுத்தே, பல தரப்பினரும் தகவல்களைப் பெற்றுக் கொள்வதில் ஆர்வமாக இருக்கின்றனர்.

0 Responses to தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் ஜனாதிபதி, பிரதமரின் சொத்து விபரங்கள் கோரல்!

Post a Comment

Followers

உலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.