வடக்கு- கிழக்கு மாகாணங்களை இணைக்குமாறு இந்தியா எந்தவித அழுத்தத்தினையும் இலங்கைக்கு வழங்காது என்று இந்திய வெளியுறவுச் செயலாளர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
இலங்கை வந்துள்ள இந்திய வெளியுறவுச் செயலாளருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கியஸ்தர்களுக்கும் இடையிலான சந்திப்பு கொழும்பிலுள்ள இந்தியத் தூதுவராலயத்தில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்றது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
வடக்கு- கிழக்கு மாகாணங்களின் இணைப்புத் தொடர்பில் இந்தியா இலங்கைக்கு அழுத்தங்களை வழங்க வேண்டும் என்று சந்திப்பின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கியஸ்தர்கள் இந்திய வெளியுறவுச் செயலாளரிடம் வலியுறுத்தினர்.
அதற்கு பதிலளித்துள்ள எஸ்.ஜெய்சங்கர், “1987ஆம் ஆண்டு இருந்த நிலைமை இப்போது மாறி விட்டது, கொழும்பில் ஆட்சி மாற்றம் நிகழ்ந்திருக்கிறது. இப்போது பல்வேறு வாய்ப்புகள் திறந்து விடப்பட்டுள்ளன. இதனைப் பயன்படுத்தி தமிழர்களின் உரிமைகளை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். எனினும், ஏனைய எல்லா விவகாரங்கள் குறித்து பேசும் போதும், வடக்கு- கிழக்கு இணைப்பை பணயம் வைக்கக் கூடாது. தமிழர்கள் இதனை உயிர்ப்புடன் வைத்திருந்தால் இந்தியா அதனை கருத்தில் கொள்ளாது, எனினும், இலங்கை அரசுடனான பேச்சுக்களில் இதுபற்றி கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படும்.
அத்துடன், இந்திய – இலங்கை உடன்பாட்டை ஒருதலைப்பட்சமாக நடைமுறைப்படுத்த முடியாது. இந்த உடன்பாட்டை தடம்புரளச் செய்வதற்கு விடுதலைப்புலிகள் ராஜீவ் காந்தியை படுகொலை செய்தனர். தமிழர் விடுதலைக் கூட்டணியும், இந்த உடன்பாட்டை கண்டித்தது. இந்த உடன்பாட்டுக்கு எதிரானவரான மஹிந்த ராஜபக்ஷ 2005ஆம் ஆண்டு தெரிவு செய்யப்படுவதை விடுதலைப் புலிகளும் எதிர்பார்த்திருந்தனர். இவற்றை நன்றாக புரிந்து கொள்ள வேண்டும்.” என்றுள்ளார்.

0 Responses to வடக்கு- கிழக்கினை இணைக்குமாறு இந்தியா இலங்கைக்கு அழுத்தங்களை வழங்காது: எஸ்.ஜெய்சங்கர்