Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

அமைச்சர் பதவி தந்தால் தான் ஆதரவு, இல்லையேல், முதல்வர் பன்னீர்செல்வம் பக்கம் செல்வோம்' என எம்.எல்.ஏ,க்கள் சிலர் மிரட்டுவதால் சசிகலாவும், அவரது குடும்பத்தினரும் செய்வதறியாமல் தவித்து வருகின்றனர் என்கின்றன சில ஊடகத்கவல்கள்.

சசிகலாவுக்கு எதிராக, முதல்வர் பன்னீர்செல்வம் திடீரென போர்க்கொடி தூக்கியதால், அவரின் பின்னால், எம்.எல்.ஏ.,க்கள் செல்வதை தடுக்க, சசிகலா குடும்பத்தினர், அவர்களை நட்சத்திர ஓட்டலில் தங்க வைத்து, நன்கு «கவனித்து» வருகின்றனர்.

எனினும் சசிகலாவிற்கு ஆதரவு தெரிவித்த, எம்.எல்.ஏ.,க்களில் பெரும்பாலானோர், 'அமைச்சர் பதவி தர வேண்டும்; இல்லாவிட்டால், முதல்வர் பன்னீர்செல்வம் பின் சென்று விடுவோம்' எனக் கூற, சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினரை இதனால், அவர்கள் செய்வதறியாமல் தவித்து வருகின்றனர். மேலும் சசிகலா வசமுள்ள, எம்.எல்.ஏ.,க்களில் பெரும்பாலானோர், முதல்வர் பன்னீர்செல்வத்திடமும் தொடர்பு கொண்டுள்ளனர். இதனால், சசிகலாவுக்கு சிக்கல் அதிகரித்துள்ளது.

அதே நேரத்தில், கட்சியின் கீழ்மட்ட நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள், அனைவரின் எதிர்ப்பையும் மீறி, முதல்வராக சசிகலா முயற்சித்து வருகிறார். அவரது கனவுக்கு இடையூறாக, தலை மேல் தொங்கும் கத்தி போல் சொத்து குவிப்பு வழக்கு உள்ளது. இதில், தனக்கு பாதகமாக தீர்ப்பு வந்தால், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், தற்போதைய அமைச்சர் ஓ.எஸ்.மணியன் ஆகியோரில் ஒருவரை முதல்வராக நியமிக்கவும், சசிகலா பரிசீலிப்பதாக கூறப்படுகிறது.

0 Responses to பதவி தந்தால் ஆதரவு?: சசிகலாவிடம் எம்.எல்.ஏக்கள்?

Post a Comment

Followers

உலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.