அதிமுகவின் பொதுச் செயலாளர் சசிகலா பெங்களூரு பரப்பன அக்ரஹரா சிறைக் கைதியானார். தமிழக அரசியலின் பெரும் பரபரபரப்பான சூழலில், நேற்றைய தினம் வெளியாகிய சொத்துக் குவிப்பு வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பின் பிரகாரம், தமிழக முதல்வராகும் கோரிக்கையினை ஆளுநருக்குச் சமர்ப்பித்திருந்த அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார்.
அந்த வழக்கில் முதற் குற்றவாளியாகக் காணப்பட்ட முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணித்துவிட்டதால், அடுத்துக் குற்றவாளிகளாகக் காணப்பட்ட சசிகலா, இளவரசி, சுதாகரன், ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹராவிலுள்ள பெங்களூர் கூடுதல் உரிமையியல் நீதிமன்றத்தில் நீதிபதி அஷ்வந்த் நாராயணா முன்னிலையில் சரணடைய வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.
இன்றைய தினம் நண்பகல் 12 மணியளவில், போயஸ் கார்டன் இல்லத்தில் இருந்து புறப்பட்ட சசிகலா, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடம் சென்று, மலர்தூவி மரியாதை செலுத்திய சசிகலா, சமாதியில் அடித்துச் சபதம் செய்து கொண்டதத் தொடர்ந்து ராமாவரத்தில் உள்ள எம்.ஜி.ஆர். இல்லத்திற்குச் சென்றும் அஞ்சலி செய்தார்.
தொடர்ந்து பெங்களூர் நோக்கிப் புறப்பட்ட சசிகலாவுடன், இளவரசியும், உடன்சென்றார். மாலை 5.15 மணியளவில் பெங்களூர் பரப்பன அக்ரஹரா கூடுதல் உரிமையியல் நீதிமன்றத்தில் நீதிபதி அஷ்வந்த் நாராயணா முன் சசிகலா, இளவரசி ஆகியோர் சரண் அடைந்தனர். அங்கு நீதிமன்ற நடைமுறைகள் நிறைவு பெற்றதும், பெங்களூர் பரப்பன அக்ரஹராவின் சிறைக் கூடத்தில் கைதியாகச் சிறைவைக்கப்பட்டார்கள்.
உடல்நலக்குறைவைக் காரணம் கூறி, சரணடைவதற்குக் கால அவகாசம் கோரியிருந்த சுதாகரனின் மனுவை நீதிபதிகள் நிராகரித்ததினால், சசிகலா, இளவரசியைத் தொடர்ந்து, சுதாகரனும் நீதிமன்றில் சரண் அடைந்தார்.

0 Responses to சிறைக் கைதியானார் சசிகலா!