Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஆப்கானிஸ்தான் எல்லையோடு சக்தி வாய்ந்த ஆர்ட்டிலெரிகளை பாகிஸ்தான் இராணுவம் நகர்த்தியுள்ளது. இது தொடர்பில் பாகிஸ்தான் இராணுவத் தளபதி ஜெனெரல் கமார் ஜாவெட் பஜ்வா அளித்த தகவலில் ஆப்கான் எல்லையோரம் மேற்கொள்ளப் பட்ட இந்த பாதுகாப்பு நடவடிக்கை முற்றிலும் தீவிரவாதத்துக்கு எதிரான போருக்காகவே என்று தெரிவித்துள்ளார்.

கமான் மற்றும் டொர்க்காம் மாவட்டங்களில் உள்ள ஆப்கான் எல்லைப் பகுதிகளிலேயே இவ்வாறு ஆர்ட்டிலரிகள் நகர்த்தப் பட்டுள்ளன. பாகிஸ்தானில் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வரும் தெரிக் இல் தலிபான் போன்ற தீவிரவாத அமைப்புக்கள் ஆப்கானில் பாதுகாப்பாக மறைந்திருந்து செயற்பட்டு வருவதாக பாகிஸ்தான் குற்றம் சாட்டி வந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இந்த இராணுவ நடவடிக்கை பாகிஸ்தானுக்கு மட்டுமல்லாது ஆப்கானுக்கும் பொது எதிரியாகச் செயற்பட்டு வரும் தீவிரவாத குழுக்களை ஒழிப்பதற்கே என ஜெனெரல் பஜ்வா தெரிவித்துள்ளார். பாகிஸ்தானில் சமீபத்தில் சூஃபி தலம் மீது மேற்கொள்ளப் பட்ட மோசமான தற்கொலைத் தாக்குதலை அடுத்து றாவல்பிண்டியில் நடத்தப் பட்ட அதி உயர் பாதுகாப்பு மாநாட்டை அடுத்தே இராணுவம் இந்த அதிரடியில் இறங்கியுள்ளது.

இந்நிலையில் சட்ட விரோதமாக எல்லையைக் கடந்து வந்து தாக்குதல் நடத்தும் தீவிரவாதிகளைக் கட்டுப்படுத்த ஆப்கான் இன்னும் அதிகளவில் பாகிஸ்தானுடன் எல்லைக் கூட்டுறவை வலுப் படுத்த வேண்டும் எனவும் ஜெனெரல் பஜ்வா கோரிக்கை விடுத்துள்ளார். சமீபத்தில் பாகிஸ்தான் நாடளாவிய ரீதியில் மேற்கொண்ட ரெயிடில் 130 தீவிரவாதிகள் கொல்லப் பட்டதாகவும் பெரும்ப்பாலான ஆப்கானியர்கள் உட்பட 350 பேர் கைது செய்யப் பட்டதாகவும் அந்நாட்டு அரசு அறிவித்திருந்தது.

0 Responses to ஆப்கான் எல்லையோடு சக்தி வாய்ந்த ஆர்ட்டிலெரிகளை நகர்த்தியுள்ள பாகிஸ்தான்

Post a Comment

Followers

உலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.