நல்லாட்சி அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்குமாறு கோரிய தமிழ்த் தலைமைகளினாலும், நல்லாட்சி அரசாங்கத்தினாலும் தமிழ் மக்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகள் எவையும் நிறைவேற்றப்படவில்லை என்று முல்லைத்தீவு கேப்பாபுலவில் மண் மீட்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பொதுமக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
முல்லைத்தீவு கேப்பாபுலவு பிலவுக்குடியிருப்பு மக்கள் முன்னெடுத்துள்ள மண் மீட்புப் போராட்டம் இரவு பகல் பாராது ஏழாவது நாளாக இன்று திங்கட்கிழமையும் தொடர்கின்றது. கேப்பாபுலவு விமானப்படையின் பிரதான நுழைவாயிலிருந்து பிலவுக்குடியிருப்பு வரையுள்ள 84 குடும்பங்களின் காணிகளை விடுவிக்கக் கோரியே இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ள மக்கள் தெரிவித்துள்ளதாது, “எமது நிலங்களை விடுவிப்பதாகவும், காணாமலாக்கப்பட்டோர் தொடர்பில் உரிய பதில் வழங்குவதாகவும் தெரிவித்தே அவர்கள் எங்களுடைய வாக்குகளை பெற்றனர். ஆனால் வாக்குறுதிகள் கடந்த 2 வருடங்களாகியும் நிறைவேற்றப்படவில்லை.
நிலங்கள் விடுவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகின்ற போதும் நில விடுவிப்பு எந்த வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. காணாமலாக்கப்பட்டோர் தொடர்பில் உரிய பதில்கள் வழங்கப்படவில்லை. எமது போராட்டத்தை அரசியல்வாதிகள் வந்து பார்த்து விட்டுச் செல்கின்றனரே தவிர பொறுப்பு வாய்ந்த பதில்களையோ, உரிய நடவடிக்கையையோ மேற்கொள்ளவில்லை. எனவே உரிய தீர்வு கிடைக்கும் வரை போராட்டம் தொடரும்.” என்றுள்ளனர்.

0 Responses to தமிழ்த் தலைமைகளும், நல்லாட்சி அரசாங்கமும் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை: கேப்பாபுலவு மக்கள்