Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழகத்தின் புதிய முதலமைச்சராக எடப்பாடி கே.பழனிச்சாமி சற்றுமுன்னர் (இன்று வியாழக்கிழமை மாலை), தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் முன்னிலையில் பதவியேற்றார்.

தமிழக முதலமைச்சராக பதவி வகித்து வந்த ஓ.பன்னீர்செல்வம் கடந்த 5ஆம் திகதி தன்னுடைய பதவியை இராஜினாமாச் செய்திருந்தார். அதனையடுத்து, கடந்த 7ஆம் திகதி அதிமுகவுக்குள் பெரும் பிரிவும் சர்ச்சையும் ஏற்பட்டது. இந்த நிலையிலேயே, தற்போது எடப்பாடி கே.பழனிச்சாமி தலைமையிலான புதிய அரசாங்கம் பதவியேற்றுள்ளது.

தமிழக வரலாற்றில் எடப்பாடி கே.பழனிச்சாமி 13வது முதலமைச்சர் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழக ஆளுங்கட்சியான அதிமுகவின் கட்சிக்குள் எழுந்த குழப்ப நிலை காரணமாக, ஏற்பட்டிருந்த அசாதாரண அரசியற் குழப்பங்கள் தணிந்து, தமிழகத்தின் 13வது முதல்வராக திரு. எடப்பாடி பழனிச்சாமி பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.

அதிமுகவின் பொதுச் செயலாளர் சசிகலா சொத்துக் குவிப்பு வழக்கில் உச்சநீதிமன்றத்தால் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவரால் தெரிவுசெய்யப்பட்ட எடப்பாடி பழனிச்சாமி அவர்கள், தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ் அவர்களைச் சந்தித்து ஆட்சியமைக்கக் கோரியதன் பிரகாரம், இன்று மாலை அவருக்கும், அவருடன் பொறுப் பேற்றுக் கொண்ட 30 அமைச்சர்களுக்கும், ராஜ்பவனில் ஆளுநர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். மிக எளிமையாக நடைபெற்ற இப் பதவிப் பிரமாணத்தைத் தொடர்ந்து தமிழகத்தின் புதிய முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி பதவியேற்றுக் கொண்டார்.

0 Responses to தமிழகத்தின் புதிய முதலமைச்சராக எடப்பாடி கே.பழனிச்சாமி பதவியேற்றார்!

Post a Comment

Followers

அதிகமாக வாசிக்கபட்டவை...