Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

போர்க்குற்ற நீதிமன்றங்களை அமைப்பது தொடர்பில் பேசினால், புதிய அரசியலமைப்பினை உருவாக்க முடியாது போகலாம் என்று சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் மத்தியில் நேற்று செவ்வாய்க்கிழமை பேசும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறியுள்ளதாவது,“எனது ஆட்சிக்காலத்தில் இருந்ததை விடவும் இப்போதுள்ள நல்லாட்சி அரசாங்கத்திற்கு சவால்கள் அதிகம். அந்த காலத்தில் கடும்போக்கு அமைப்புகள் இருக்கவில்லை. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான கூட்டு எதிரணி போன்ற பிரிவுகளும் இருக்கவில்லை. அந்த வகையில் புதிய அரசாங்கத்திற்கு சவால்கள் அதிகம் உள்ளன.

எவ்வாறாயினும் புதிய அரசியலமைப்பு தொடர்பாக வெண்தாமரை திட்டம் போன்று மக்கள் ஆதரவு திரட்டும் திட்டமொன்று முன்னெடுக்கப்படுவது அவசியமாகும். இதுதொடர்பில் விரைந்து செயலாற்றுவது தற்காலத்தின் தேவையுமாகும். ” என்றுள்ளார்.

0 Responses to போர்க்குற்ற நீதிமன்றங்களை அமைப்பது தொடர்பில் பேசினால், புதிய அரசியலமைப்பினை உருவாக்க முடியாது: சந்திரிக்கா

Post a Comment

Followers

உலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.