Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

வெள்ளிக்கிழமை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெளியிட்ட டுவீட்டில் குறிப்பிட்ட சில அமெரிக்க ஊடகங்கள் அமெரிக்க மக்களின் எதிரிகள் எனக் கருத்துத் தெரிவித்துள்ளார். ஃபுளோரிடாவில் தனது விடுமுறையைக் கழித்து விட்டுத் திரும்பிய அவர் சுமார் 140 எழுத்துருக்களில் இந்தக் கருத்தை டுவிட்டரில் தெரிவித்துள்ளார். அதில் இவ்வாறு குறிப்பிடப் பட்டுள்ளது.

தவறான செய்திகளைத் தரும் ஊடகங்களான நியூயோர்க் டைம்ஸ், என் பி  ஸி நியூஸ் (NBCNews), ஏபிசி (ABC), சிபிஎஸ் (CBS) மற்றும் சி என் என் (CNN) போன்றவை எனது எதிரிகள் அல்ல. அமெரிக்க மக்களின் எதிரிகள் எனப்பட்டுள்ளது. ஏற்கனவே தனது தேர்தல் பிரச்சாரங்களின் போதும் கூட 70 வயதாகும் டிரம்ப் முக்கிய சில ஊடகங்கள் மற்றும் பத்திரிகைகளை பக்கச்சார்பானவை என விமர்சித்து வந்ததுடன் பத்திரிகையாளர்களைக் குற்றம் சாட்டியும் வந்தவர் ஆவார். இந்நிலையில் வியாழக்கிழமை தனிப்பட்ட முறையில் டிரம்ப் ஒழுங்கு செய்திருந்த செய்தியாளர் மாநாட்டில் கடந்த ஒரு மாதமாக தனது ஆட்சியின் கீழ் நிர்வாகத்துறையில் ஏற்பட்ட பல சிக்கல்களுக்கு ஊடகங்களைக் குற்றம் சாட்டியும் இருந்தார். டிரம்புக்கு முன்பு அதிபர்களாகப் பதவியில் இருந்த பல ஜனாதிபதிகளும் கூடப் பத்திரிகைகளைக் குற்றம் சாட்டியது உண்டு. ஆனால் டிரம்ப் கையாளும் மொழி நடை  அதிகாரம் மிக்கதாகவும் உலகத் தலைவர்களைத் திரும்பிப் பார்க்க வைப்பதாகவும் இருப்பதாகக் கூறப்படுகின்றது.

குறிப்பாக டிரம்ப் குற்றம் சாட்டியிருந்த சில பத்திரிகைகளது நேர்மையற்ற தன்மையின் வீதம் அளவுக்கு மீறியதாக உள்ளது என அவர் செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்தது பலரை சங்கடத்துக்கு உள்ளாக்கியுள்ளது. இதேவேளை சனிக்கிழமை அமெரிக்கத் துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் டிரம்பின் நிர்வாகத்தின் கீழான முதலாவது பிரதான வெளியுறவுக் கொள்கையை மூனிச்சில் இடம்பெற்ற பாதுகாப்பு மாநாட்டில் தெரிவித்துள்ளார். அவரது அறிக்கையில் அமெரிக்கா ஐரோப்பிய யூனியனுடனும் நேட்டோவுடனும் மிக உறுதியான நிலைப்பாட்டைக் கடைப் பிடிக்கும் எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது. மேலும் டிரம்பின் உறுதிமொழி இதுவென ஐரோப்பாவுடன் இன்றும் இனி வரும் ஒவ்வொரு நாளும் நாம் இணைந்து நடப்போம் ஏனெனில் நாம் அனைவரும் சுதந்திரம், ஜனநாயகம், நீதி மற்றும் சட்டம் போன்ற துறைகளில் ஒன்றிணைந்த நிலையான கொள்கைகளையே கடைப் பிடிப்பவர்கள் எனவும் கூறப்பட்டுள்ளது.

0 Responses to குறிப்பிட்ட அமெரிக்க ஊடகங்கள் அமெரிக்க மக்களின் எதிரி என டொனால்ட் டிரம்ப் தெரிவிப்பு

Post a Comment

Followers

அதிகமாக வாசிக்கபட்டவை...