Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

புதிய அரசியலமைப்பு மீது பொது வாக்கெடுப்பு நடத்தப்படும் என்று சபை முதல்வரும் அமைச்சருமான லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆதரவுடன் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை விமல் வீரவன்ச எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போதே அவர் மேற்கண்ட விடயத்தைக் கூறியுள்ளார்.

தேசிய இனப்பிரச்சினைகளுக்கு புதிய அரசியலமைப்பில், 13ஆம் திருத்தத்தை அடிப்படையாகக் கொண்டு தீர்வு காண எதிர்பார்த்துள்ளதாகவும் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

0 Responses to புதிய அரசியலமைப்பு மீது பொது வாக்கெடுப்பு நடத்தப்படும்: லக்ஷ்மன் கிரியெல்ல

Post a Comment

Followers

அதிகமாக வாசிக்கபட்டவை...