Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சட்டப்பேரவை நிகழ்வுகள் செல்போன் வீடியிவாயினும் ஆதாரமாக ஏற்றுக்கொள்ளப்படும்  என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள், ஸ்டாலின் தொடர்ந்த வழக்கு விசாரணையில் கூறியுள்ளனர்.

கடந்த வாரம் சட்டப்பேரவை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்ற போது,நம்பிக்கை வாக்கெடுப்பை ரகசிய வாக்கெடுப்பாக நடத்த வேண்டும் என்று திமுக மற்றும் ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர்கள் வலியுறுத்தினர்.இதற்கு சபாநாயகர் தனபால் அனுமதி மறுத்த நிலையில், திமுகவினர் அமளியில் ஈடுபட்டனர் என்று, சபாநாயகர், திமுகவினரை வலுக்காட்டாயமாக வெளியேற்ற உத்தரவுப்
பிறப்பித்தார்.

இதனால், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் மற்றும் திமுக எம் எல் ஏக்கள் காயமடைந்தனர் என்றும், சிலரின் சட்டைகள் கிழிக்கப்பட்டன என்றும் தகவல்கள் வெளியாகின. இதையடுத்து, இந்த வாக்கெடுப்பு செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என்று, திமுக உறுப்பினர்கள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, பன்னீர் செல்வம் உள்ளிட்டவர்களை இவ்வழக்கில் சாட்சியாக சேர்த்திருப்பது ஏன் என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.பன்னீர் செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களும் தங்களது கோரிக்கையை முன்வைத்தார்களால் என்பதால், அவர்கள் உண்மை சொல்லக்கூடும் என்று ஸ்டாலின் தரப்பு வழக்கறிஞர் கூறினர்.

நீதிபதிகள் சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பின் போது நடந்த நிகழ்வுகளை எந்த உறுப்பினராயினும் செல்போனில் வீடியோவாக பதிவு செய்து இருந்ததை சமர்பித்தாலும் ஆதாரமாக ஏற்றுக்கொள்ள தயார் என்று கூறி, வழக்கு விசாரணையை வரும் 27ம், திகதிக்கு வைத்துள்ளனர். 

0 Responses to சட்டப்பேரவை நிகழ்வுகள் செல்போன் வீடியோவாயினும் ஆதாரமாக ஏற்றுக்கொள்ளப்படும்: நீதிபதிகள்

Post a Comment

Followers

உலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.