Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமது காணிகளை விடுவிக்குமாறு கடந்த 16 நாட்களாக முல்லைத்தீவு கேப்பாபுலவு மக்கள் போராடி வருகின்ற நிலையில், குறித்த போராட்டம் அர்த்தமற்றது என்று அமைச்சரவைப் பேச்சாளரும் சுகாதார அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

வடக்கில் காணிகளை இழந்த அநேகமானோருக்கு ஏற்கனவே காணிகள் வழங்கப்பட்டுள்ளன. இதனை ஒரு பகல் இரவுகளுக்குள் செய்து முடிக்க இயலாது. அரசாங்கம் ஏற்கனவே இவ்விடயத்தில் தலையிட்டுள்ளது. படிப்படியாக அனைவரினது தேவைகளும் கவனத்திற் கொள்ளப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு நேற்று புதன்கிழமை நடைபெற்றது. அங்கு கருத்து வெளியிடும் போதே ராஜித சேனாரத்ன மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, "நல்லாட்சி அரசாங்கத்தில் ஜனநாயகத்துக்கு முக்கிய அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. தெற்கில் இப்போது தொட்டதற்கெல்லாம் போராட்டம் நடத்துகின்றனர். அதனையே வடக்கிலுள்ள மக்களும் இப்போது பின்பற்ற ஆரம்பித்துள்ளனர்.

போராட்டம் நடத்தினால் தாங்கள் கேட்டது கிடைக்கும் என வடக்கு மக்களுக்கும் இப்போது தெரியும். முன்னர் ஒரு அங்குலம்கூட காணி வழங்கப்பட்டிருக்கவில்லை. இப்போது வழங்குவது தெரிந்ததுமே போராட்டங்கள் நடத்தப்படுகின்றன. ஏற்கனவே பலருக்கு மாற்றுக் காணிகள் வழங்கப்பட்டுள்ளன.

கேப்பாபுலவு மக்கள் இரவும் பகலும் போராட்டம் நடத்துகின்றார்கள் என்பதற்காதக ஒரு இரவு, பகலுக்குள் இப்பிரச்சினைக்கு தீர்வு கண்டுவிட முடியாது. அரசாங்கம் ஏற்கனவே இந்த விடயத்தில் தலையிட்டிருப்பதனால் படிப்படியாகவே இது தொடர்பில் கவனம் செலுத்த முடியும்.” என்றுள்ளார்.

0 Responses to கேப்பாபுலவு காணி மீட்புப் போராட்டம் அர்த்தமற்றது: ராஜித சேனாரத்ன

Post a Comment

Followers