அரசியல் மற்றும் சட்ட ரீதியிலான தடைகளை இலங்கை அரசாங்கம் கடக்கும் வரையில், அம்பாந்தோட்டை துறைமுக அபிவிருத்தித் திட்டத்தில் 1.1 பில்லியன் டொலர்களை முதலிடுவதிலிருந்து ஒதுங்கியிருக்க (அல்லது அதனை ஒத்திவைக்க) சீனா தீர்மானித்துள்ளது.
இந்த திட்டம் தொடர்பான பேச்சுக்களில் தொடர்புடையவர்களை ஆதாரம் காட்டியே மேற்கண்டவாறு ரொய்ட்டர் செய்தி வெளியிட்டுள்ளது.
பெரியளவில் கடனாளியாகியுள்ள இலங்கைக்கு நிதி தேவைப்படுகிறது. ஆனால், அம்பாந்தோட்டைத் துறைமுகத்தில் சீனாவின் நலன்களுக்கான கொடுப்பனவு சில வாரங்கள், அல்லது மாதங்களுக்கு தாமதிக்கப்படக் கூடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த டிசம்பர் மாதம் சீன அரசின் மேர்ச்சர்ன்ட்ஸ் போட் ஹோல்டிங் நிறுவனத்துடன் ஒரு உடன்பாடு கையெழுத்திடப்பட்டதை அடுத்து, ஜனவரி 07ஆம் நாளுக்குள் அம்பாந்தோட்டைத் துறைமுகத்தின் 80 வீத பங்குகளை வாங்குவதாக இணக்கம் காணப்பட்டிருந்தது.
இந்தப் பகுதியில் 15 ஆயிரம் ஏக்கரில் கைத்தொழில் வலயம் ஒன்றை உருவாக்க இலங்கையுடன் சீனா இணங்கியிருந்தது. இதுபற்றிய உடன்பாடு பின்னர் இறுதி செய்யப்படும் என்று இலங்கை நம்பியது. ஆனால், கைத்தொழில் வலயத்துக்கு காணிகளை விற்பதாக கூறி, உள்ளூரில் போராட்டங்கள் எழுந்துள்ளதுடன், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜக்ஷவுடம் இதற்கு கடும் எதிர்ப்பு வெளியிட்டு வருகிறார்.
மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவான பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் இதற்கு எதிராக நீதிமன்றத்துக்கும் சென்றுள்ளார். இந்தநிலையில் அம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் கைத்தொழில் வலய திட்டம் ஆகியவற்றை ஒன்றிணைத்து, உடன்பாட்டைச் செய்து கொள்ளலாம் என்றும், உள்நாட்டு விவகாரங்களைத் தீர்த்துக் கொள்ளும் வரையில் இதனை நிறுத்தி வைப்பதென்னும் சீனா முடிவு செய்துள்ளது.

0 Responses to அம்பாந்தோட்டை துறைமுகத் திட்டத்தில் முதலீடு செய்வதை ஒத்திவைக்க சீனா தீர்மானம்!